மாட்டுக்கறி கூடாது! மனித மலத்தை உண்ணட்டும்!: ராமகோபாலன் பேட்டி

r 1

மாட்டுக்கறி சாப்பிட்டதாக உ.பியில்  இசுலாமியர் ஒருவர் கொல்லப்பட தற்போது தமிழகம் எங்கும் மாட்டுக்கறி சாப்பிடும் போராட்டம், நிகழ்வுகளை நடத்திவருகின்றன பல அமைப்புகள்.  இந்த நிலையில் இந்துமுன்னணி தலைவர் ராமகோபாலனை சந்தித்தோம்.

மாட்டுக்கறி  உண்டதாகச் சொல்லி இசுலாமியர் ஒருவர் உ.பியில் கொலை செய்யப்பட்டிருக்கிறாரே! அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இந்துக்கள் எதையெல்லாம் புனிதமா நினைக்கிறாங்களோ அதையெல்லாம் அவமானப்படுத்த வேண்டும் என்று முஸ்லிம்கள் நினைக்கிறார்கள்

குறிப்பிட்ட இந்த சம்பவம் உங்களை பாதிக்கவில்லையா?

அப்படி ஒரு சம்பவம் நடந்ததா என்பது உறுதியாக தெரியவில்லை. நான் அங்கு போகவும் இல்லை. யூகங்களுக்கு பதில் அளிக்க முடியாது.  

சரி, மாட்டுக்கறி சாப்பிடுவது பற்றி பொதுவாக உங்கள் கருத்து என்ன? மாட்டுக்கறி சாப்பிடும் போராட்டங்கள் நடக்கின்றனவே?

மனித மலத்தை வேண்டும்னாலும் சாப்பிடட்டும். எங்களுக்கு  ஆட்சேபணை கிடையாது. ஆனால் இந்துக்கள் புனிதமாய் நினைக்கும் பசுவைக் கொன்று தின்றால், அதற்கான எதிர்விளைவை சந்தித்தே ஆக வேண்டும்.

எதிர்விளைவு என்றால்…?

(குறுக்கிட்டு) எதிர்விளைவு என்றால், எதிர்விளைவுதான்!

சீனாவுக்கு மாட்டுக்கறி அனுப்புவது பற்றி பிரதமர் மோடியின் இந்துத்துவா அரசு ஒப்பந்தம் போட்டுள்ளதே?

அது உறுதிப்படுத்தப்பட்ட தகவலா என்று தெரியவில்லை. தெரிந்துகொண்டு பேசுகிறேன். தவிர, தனது அரசை இந்துத்துவ அரசு என்று மோடி சொல்லவே இல்லையே!

r 2மாட்டுத்தோலால் செய்யப்படும் செருப்பை நீங்களும், நானும் அணிகிறோம். மாட்டு எலும்பு பயன்படுத்தப்பட்ட மருந்துகளை சாப்பிடுகிறோம். இதையெல்லாம் தவிர்க்க முடியுமா? 

இதையெல்லாம்  தவிர்க்கணும்னு நான் சொல்லலை.  ஏன்னா, செருப்பு போடுறது, மருந்து சாப்பிடுறது.. இதெல்லாம் நாம் அறியாமல் செய்யும் விசயங்கள். அவற்றை பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால் உணவுக்காக மாட்டை வெட்டி கொல்வதை ஏற்க முடியாது. அது இந்துக்களை அவமானப்படுத்தும் செயல்.

இந்து மதத்தின் அடிப்படை  என்று சொல்லப்படும்  வேதத்தில், மாட்டை எப்படி வெட்டுவது, அறுப்பது, சமைப்பது, உண்பது என்பதெல்லாம்  விளக்கமாக எழுதப்பட்டிருக்கிறதே. பார்ப்பனர்கள், மாட்டுக்கறி உண்ட தகவலும் இருக்கிறதே!

வேதத்தில சொல்றபடி யாரு இப்ப நடக்கறாங்க?  அது  பிராக்டிகல் லைப்புக்கு சரிவருமா..?  தவிர, வேதத்துல கோ என்று சொல்லப்பட்டிருப்பது பசுவை என்று நினைத்துக்கொண்டு சில அரைகுறைகள் இப்படி பேசுகிறார்கள். கோ என்றால், “மனித உணர்வுகள்” என்று அர்த்தம். அந்த உணர்வை எப்படி வெல்வது என்றுதான் உவமானமாய் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.  இதை புரிந்துகொள்ளாமல்  சிலர் விதண்டாவாதம் செய்கிறார்கள்!

மாட்டுக்கறி திண்ணும் போராட்டம் நடத்தினால் நாங்கள் பன்றிக்கறி திண்ணும் போராட்டம் நடத்துவோம் என்று ஹெச்.ராஜா சொல்லியிருக்கிறாரே?

வாதத்துக்காக அப்படி சொல்லியிருப்பார். எந்த இந்துவும் பன்றிக்கறி சாப்பிடமாட்டான்.

கோயிலுக்குள் நுழைந்த தலித் முதியவர் கொல்லப்பட்ட சம்பவமும் சமீபத்தில் நடந்திருக்கிறதே?

அப்படி நடந்திருந்தால் அது காட்டுமிராண்டித்தனம். வன்மையாக கண்டிக்கிறேன்.

தமிழகத்தில் சேச சமுத்திரம் கிராமத்தில் தலித் பகுதி தேர் தங்கள் பகுதிக்குள் வரக்கூடாது என சாதி  இந்துக்கள் பிரச்சினை செய்து, பெரும் கலவரமாக மாறியதே?

அதை நான் வன்மையாக எதிர்க்கிறேன்  அந்த பகுதியில் இருக்கும் எங்கள் இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள்,  சாதி இந்துக்களிடம், நீங்கள் செய்தது தவறு என்று  எடுத்துச் சொன்னார்கள்.  1939ம் ஆண்டு வைத்தியநாதய்யாரால் மதுரையில் தலித்துகள் ஆலய பிரவேசம் நடந்தது. அப்போதே யாரும் எதிர்க்கவில்லையே. இந்தக்காலத்திலா எதிர்க்கப்போகிறார்கள்.

சமீபத்தில் வந்த கணக்கெடுப்பு தகவலின் படி, முஸ்லிம்கள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இது அபாயகரமானது என்று இந்துத்துவவாதிகள் கூறுவது சரிதானா?

அது ஒன்றும் இந்துத்துவவாதிகளின் கற்பனை இல்லையே… உண்மயைன விபரம்தானே!  முஸ்லிம்கள் எண்ணிக்கை  0.8 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்துக்களின் எண்ணிக்கை 0.7 சதவீதம் குறைந்துள்ளது என்பது ஆதாரபூர்வமான தகவல்தானே!   குறிப்பிட்ட சதவிகத்துக்கு மேல தன்னோட  மதத்துக்காரன் எண்ணக்கை அதிமானா முஸ்லிம் என்ன செய்வாங்கன்னு  எல்லோருக்கும் தெரியும்.  அது தேசத்துக்கே ஆபத்து.  இப்படி முஸ்லிம்கள் பெருகியதற்குக் காரணம் அரசாங்கத்துடைய முட்டாள்த்தனம்தான்.   இதைத் தடுக்க அரசாங்கம்தான் நடவடிக்கை எடுக்கணும்.

இல்லேன்னா கலவரம் வரும். முஸ்லிம்களை இந்துக்கள் வெட்டி சாய்க்கும் நிலை ஏற்படுமோ என்று பயப்படுறேன்.

இந்து மத விழாக்களஇல் விநாயகர் ஊர்வலம் மட்டுமோ பிரச்சினை ஆகிறது. இந்து மதம் அரசியல்படுத்தப்படுதா உங்களால்?

சிறுபான்மையினர் தங்கள் மதத்தை அரசியல்படுத்தலாம் பெரும்பான்மையான இந்துக்கள் அரசியல்படுத்தக்கூடாதா? (அழுத்தமாக) ஆமாம்.. நாங்கள் இந்துக்களை, இந்து மதத்தை அரசியல்படுத்துகிறோம்!

3 thoughts on “மாட்டுக்கறி கூடாது! மனித மலத்தை உண்ணட்டும்!: ராமகோபாலன் பேட்டி

  1. Manitha Malathai patcha illaiyil allivaithu alaghu parkira DOG pesukirathu……

    Neeyum ,,un sakakalum vendum entral malathai alli thinnuka da mutta naaikala……illai alli un mugathil pusikolluda santhanam mari allagai

    erufa..

    Monna naaiye china karanuku contract pesi vantha Mosadi ku Answer pannuda….

  2. சீனாவுக்கு மாட்டுக்கறி அனுப்புவது பிரதமர் மோடியின் இந்துத்துவா அரசு! மனித மலத்தையும் மோடி அனுப்புங்கள்.

  3. ராமகோபாலன் போன்றவர்கள் வெறுப்பூட்டும் பேச்சுக்களின் மூலம் சமூக அமைதியைக் கெடுப்பவர்கள். மனித மலத்தை வணங்குவதற்கு இந்து முன்னணியினரை தயார் படுத்துவாரா கோபாலன். இந்துக்கள் பன்றிக் கறி தின்பதில்லை என்று அப்பட்டமாகப் பொய்க்கூறுகிறார் கோபாலன். கடந்த மாதம்கூட ஜெயங்கொண்டம் அருகில் தலித்துகளை கோயிலுக்குள் விடாதது பிரச்சனையாகி இருக்கிறது. ஆனால் யாரும் தடுப்பதில்லை என்கிறார். பொய்,பித்தலாட்டம்,வன்முறை ஆகியவற்றின் மீது கட்டப்படுவதுதான் இந்துத்துவம்.

Leave a Reply

Your email address will not be published.