மாமண்டூரில் மாநாட்டு திடலை பார்வையிட்டார் வைகோ

01-1459459349-vaiko-1-600

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே உள்ள மாமண்டூரில் வரும் 10ம் தேதி தேமுதிக மக்கள் நலக்கூட்டணி மாற்று அரசியல் தேர்தல் சிறப்பு மாநாடு நடைபெற உள்ளது. அம்மாநாட்டு திடலை மக்கள்நலக்கூட்டணியின் தலைவர்கள் வைகோ, முத்தரசன் மற்றும் தேமுதிகவை சேர்ந்த சுதீஷ் ஆகியோர் பார்வையிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, தேமுதிக மக்கள்நலக் கூட்டணியின் மாற்று அரசியல் சிறப்பு மாநாட்டில் கூட்டணியின் வேட்பாளர் முதற்பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.