மாயாவதி குறித்து ஆபாசமாக பேசிய பாஜக எம்எல்ஏவுக்கு பாஜக கண்டனம்

லக்னோ:

உத்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி குறித்து ஆபாசமாக பேசிய பாஜக பெண் எம்எல்ஏக்கு பாஜகவினரே கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.


உத்திரப்பிரதேச பாஜக எம்எல்ஏ சாதனா சிங் மாயாவதியின் பாலினம் குறித்து ஆபாசமான கருத்துகளை தெரிவித்திருந்தார்.

இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பெண்ணைப் பற்றி ஒரு பெண்ணே இப்படி தரம் தாழ்ந்து பேசலாமா என்று பெண்கள் அமைப்பினர் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.

உத்திரப் பிரதேசத்திலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில், பாஜக எம்எல்ஏவின் இந்த ஆபாசமான பேச்சுக்கு பாஜகவினரும் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.