மார்ச் 1 முதல்  பிளாஸ்டிக்குகளுக்கு தடை: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தகவல்

புதுச்சேரி :

புதுச்சேரி மாநிலத்தில் மார்ச் 1 முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளுக்கு தடை விதிக்க அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டதாக அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.


அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மதுபானக் கடைகளை  ஏலம் மூலம் தனியாருக்கு வழங்க அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது.

லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரை மூலம் ஊதியம் தரவும், இருளர் மலைவாழ் மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.