மியான்மரில் மதச் சண்டை!! பேஸ்புக் பயன்படுத்துவோருக்கு சிக்கல்

தற்போதைய காலக்கட்டத்தில் மனிதன் வாழ்வில் பேஸ்புக் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. உலகளவில் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பேஸ்புக் மூலம் நல்ல தகவல்கள் வெளிவந்த காலம் மாறி, தற்போது தீய சம்பவங்களும் பேஸ் புக்கில் தீயாய் பரவி வருகிறது.

பேஸ்புக் பல அரசாங்கங்களுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்துகிறது. சமீபத்தில் கூட காஷ்மீர் மாநிலத்தில் மாணவர்கள் போராட்டம் தீவிரம் அடைய பேஸ்புக் போன்ற சமூக வளைதளங்கள் தான் காரணம் என்று கூறி அந்த மாநித்தில் சமூக வளைதளங்களுக்கு தடை விதித்துள்ளது.

போராட்டங்களையும், அரசுக்கு எதிரான செயல்களுக்கு ஒருங்கிணைப்பு களமாக பேஸ்புக் மாறி வருவது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை கட்டுப்படுத்த முடியாமல் பேஸ்புக் நிறுவனம் தடுமாறி வருகிறது.

இந்த வகையில் மியான்மர் நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான செயல்களில் புத்த மதத்தினர் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. பேஸ்புக் மூலம் முஸ்லிம்கள் மீதான தாக்குதல் நடந்து வந்தது. இதை கட்டுப்படுத்த உதவுமாறு பேஸ்புக் நிறுவனத்திற்கு மியான்மர் அரசாங்கம் கேட்டுக் கொண்டது.

வெளிநாட்டினர், முஸ்லிம்களை அவர்களது கலாச்சாரத்தை கேவலப்படுத்தும் ‘காலர்’ என்ற அந்நாட்டு மொழியில் உள்ள வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. அந்நாட்டு மொழியில் இது மிகப் பெரிய கெட்ட வார்த்தையாகும். இந்த வார்த்தையை பயன்படுத்தும் பேஸ்புக் உறுப்பினர்களை தடை செய்து பேஸ்புக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

பல நாட்டு மொழிகளை பேஸ்புக் நிர்வாகம் கையாண்டு வருவதால் இந்த காலர் என்ற வார்த்தையை தடுப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த உச்சரிப்பு எந்த வகையில் வந்தாலும் அந்த ஐடி பிளாக் செய்யப்படுகிறது.

இந்த விஷயமும் பேஸ்புக்கில் வைரலாக பரவி வருகிறது. உதாரணமாக நண்பர்கள் இந்த வார்த்தையை காலர் என டைப் செய்யுமாறு தெரிவிக்கின்றனர். இதை டைப் செய்த அடுத்த விநாடியே கணக்கு முடக்கப்படுகிறது. இது தற்போது மியான்மரில் பேஸ்புக் பயன்படுத்துவோரிடம் காமெடி செயலாக மாறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை விட மோசமான வார்த்தைகளை தினமும் பயன்படுத்து போலி கணக்குகள் எல்லாம் தாரளமாக செயல்பட்டு வருகிறது. ஆனால், காலர் என்ற உச்சரிப்பு வரும் வகையில் எந்த வார்த்தை பயன்படுத்தினாலும் கணக்குகள் அடுத்த 24 மணி நேரத்திற்கு முடக்கப்படுகிறது. இது தொடர்பான இ.மெயில் புகார்களை பேஸ்புக் கண்டுகொள்வது கிடையாது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.