மீண்டும் தனுஷுடன் இணையப்போகும் நடிகை சினேகா!

நடிகர் தனுஷ், நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘மாரி 2’. இந்த படத்தின் ரவுடி பேபி சாதனையை தொடர்ந்து ‘எனை நோக்கி பாயும் தோட்டா ரிலீஸாகும் நிலையில் உளளது. தற்போது நடிகர் தனுஷ் அசுரன்’ படத்திலும் நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து ‘கொடி’ படத்தை அடுத்து மீண்டும் இயக்குநர் துரை செந்தில் குமாருடன் இணையவுள்ளார் தனுஷ். இதிலும் ‘கொடி போலவே தனுஷ் இரு வேடங்களில் நடிக்கிறாராம். இந்தப் படத்தில் அப்பா, மகன் வேடத்தில் தனுஷ் நடிக்கிறார். படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை.

திருமணத்துக்குப் பின், நடிகை சினேகா, நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க இந்த படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கெனவே, தனுஷின் இணைந்து ‘புதுப்பேட்டை படத்தில் சினேகா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Dhanush, EnaiNokiPayumThotta, kodi, Sneha
-=-