மீண்டும் பாரீஸில் துப்பாக்கிச் சூடு!

151118054522_paris_st_denis_operation_512x288_reuters_nocredit

பாரீஸ்: பாரிலீஸ் காவல் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை, பாரீ்ஸ் நகரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை அடுத்து தேடுதல் வேட்டை தொடர்ந்து நடந்துவருகிறது. இன்று காலை பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக சந்தேகித்த இடத்தில் காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

புறநகர் பகுதியான செயின்ட் டெனிஸில் தொடர்ச்சியாக துப்பாக்கிச் சத்தங்கள் கேட்கின்றன என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மக்கள் வீட்டுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

பயங்கரவாதிகள் மீதான தாக்குதலின் போது, சில காவலர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்னும் முழு விவரத்தை பிரான்ஸ் அரசு அறிவிக்கவில்லை.

 

Leave a Reply

Your email address will not be published.