Random image

மீண்டும் வடிவேலு.. விஷால் படத்தில்!

 

a

ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற  படம்,  ரோமியோ ஜூலியட். இதைத் தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தற்போது விக்ரம்பிரபு நடிக்கும் “ வீரசிவாஜி “ படத்தை  தயாரித்துக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக  விஷால் நடிக்கும் மிகப்பிரமாண்டமான படமாக கத்திசண்டை படத்தையும்  தயாரிக்கிறார்.

இதில் நகைச்சுவை  வேடத்தில் வடிவேலு நடிக்கிறார். விஷால் வடிவேலு ஏற்கனவே திமிரு படத்தில் இணைந்து நடித்து அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது. இயக்குனர் சுராஜ், வடிவேலு கூட்டணியில் தலைநகரம், மருதமலை இரண்டு படங்களுமே அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்த படத்தின் மூலம் விஷால், வடிவேலு, சுராஜ் மூவரும் கூட்டணி சேர்கிறார்கள்.

கதாநாயகி யாரென்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை.  

இந்த படத்தின் இயக்குநர் சுராஜ், “அதிரடிக்கும், நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் கொடுத்து உருகும் படம் கத்திசண்டை”  என்கிறார்.