முதலமைச்சர் பதவிக்கு தகுதி அற்றவர் விஜயகாந்த்

rath1

சமத்துவ மக்கள் கட்சி அதிமுகவுடன் கூட்டணி வைத்து இந்த முறையும் தேர்தலில் களம் காண்கிறது. சமகவுக்கு திருச்செந்தூர் தொகுதி ஒதுக்கப்பட்டது. இத்தொகுதியில் கட்சியின் தலைஅர் சரத்குமார் போட்டியிடுகிறார். இதற்காக வாக்கு சேகரிக்கும் பணியில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உடன்குடியில் சமத்துவ மக்கள் கட்சியின் மகளிர் அணித் தலைவர் ராதிகா சரத்குமார் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர், திமுகவில் நடைபெறும் குடும்ப அரசியலை மக்கள் ஒரு போதும் ஆதரிக்க மாட்டார்கள். தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கிறது. விஜயகாந்த் பேசுவது என்னவென்று அவருக்கே புரியாத நிலையில் மக்களுக்கு எப்படி புரியும். விஜயகாந்தின் திறமை குறித்து அவருடன் பல திரைப்படங்களில் நடித்தவர் என்ற முறையில் எனக்குத் தெரியும். முதலமைச்சர் ஆகும் தகுதி அவருக்கு இல்லை’’ என்று கூறினார்.