tn-meet

சென்னை:

நாளை மறுநாள் சென்னையில்  துவங்கும்சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை முன்னிட்டு பிரம்மாண்டமான ஏற்பாடுகளை செய்துள்ள தமிழக அரசு, பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளது தமிழக அரசு.

ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீடு  என்ற இலக்குடன், 100 கோடி ரூபாய் செலவில் இந்த மாநாடு நடக்கிறது. சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில்,முதல்வர் ஜெயலலிதா தலைமையில், வரும், 9, 10தேதிகளில், மாநாடு நடக்கிறது.

இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளிலிருந்து 15,000 முதலீட்டாளர்கள் பங்கேற்பார்கள் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது ,அவர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு வசதியாக, ரூ.8 கோடிமதிப்பீட்டில் கார் பார்க்கிங் வசதிசெய்யப்பட்டிருக்கிறது. . 4000 வாகனங்கள் நிறுத்தும் வகையில், 9 வாகனம் நிறுத்தும் இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

, தொழில் வர்த்தக மையத்தில் மாநாட்டிற்கான கலையரங்க மேடை,உள்ளரங்கம் உள்ளிட்ட இடங்களையும்அமைச்சர்கள், மேயர்,ஆணையாளர் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கும்நட்சத்திரஹோட்டல்கள், கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட அவர்கள் செல்ல விரும்பும் இடங்கள்கண்டறியப்பட்டு,சிரமமின்றி அவர்கள் வாகனங்களில் செல்ல வசதியாக 60 சாலைகள்சீரமைக்கப்பட்டுள்ளன

பள்ளி கல்வித்துறை செயலர் சபீதா உள்ளிட்ட ஐ.ஏ.எஸ்.,அதிகாரிகள் மேற்பார்வையில் மாநாட்டு பணிகள் நடந்து வருகின்றன.

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, டி.ஜி.பி., அசோக்குமார்,சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்ட உயர்போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி,உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறார்.

இதையடுத்து, மாநாடு நடக்கவுள்ள வர்த்தக மையம்முழுவதும்  காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்உதவியுடன் முதற்கட்ட சோதனையை முடித்துள்ளனர்.வர்த்தக மையத்தை சுற்றியுள்ள பகுதிகளில், மர்ம நபர்நடமாட்டம் குறித்தும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

சென்னை காவல்துறை ஆணையர் ஜார்ஜ், கூடுதல்ஆணையர் ஆபாஷ்குமார், இணை ஆணையர் அருண்உள்ளிட்டோர், வர்த்தக மையத்தை நேரடியாக ஆய்வுசெய்தனர். தொழில் அதிபர்கள் தங்கவுள்ள ஓட்டல்கள்,அவர்கள் செல்லும் இடங்களின் பாதுகாப்புக்கு,தனித்தனியாக ஐ.பி.எஸ்., அதிகாரிகள்நியமிக்கப்பட்டுள்ளனர். , மாநாடு அரங்கில்போடப்பட்டுள்ள இருக்கைகள், விழா மேடை, கண்காட்சிஅரங்கு, தொழில் அதிபர்கள் குறித்த சுயவிவர குறிப்புஎன, அனைத்து விவரங்களையும் புத்தகமாக தயாரித்து,விரல் நுனியில் வைத்துள்ளனர்.

முதலீட்டாளர் மாநாடுக்காக  10 ஆயிரம் போலீசார்அடங்கிய பெரும்படை  பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. அவர்கள், முதலீட்டாளர்கள் வருகை தரும் விமானநிலையம் துவங்கி, அனைத்து இடங்களிலும் அதிரடிசோதனை நடத்தி, பாதுகாப்பு ஏற்பாடுகளை   செய்துவருகின்றனர்.

போக்குவரத்து காவலர்கள், தொழிலதிதிபர்கள் செல்லும் வழிகள்,  கார்கள் நிறுத்தும் இடங்கள், ஓட்டுனர் ஓய்வுஎடுக்கும் இடம் என, அனைத்து தகவல்களையும் மேப்வரைந்து  தமிழக அரசிடம்  சமர்பித்துள்ளனர்.

மாநாடு பாதுகாப்பு நடவடிக்கையில் கவனக்குறைவாக இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவலர்களுக்கு உயரதிகாரிகள் எச்சரிக்கை செய்துள்ளனர்.