முதல் முறையாக மகளின் வீடியோவை இணையத்தில் வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்…..!

கடந்த மாதம் ஜூன் 14ஆம் தேதி தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் நடித்த கடைசி படம் தில் பேச்சாரா .

இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானின் இசையில் சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் வெளிவந்து ரசிகர்களை மிகவும் கவர்ந்தது .

பிரபலங்கள் பலரும் சுஷாந்த் சிங்கிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தில் பேச்சாரா டைட்டில் பாடலை பாடி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது ஏ.ஆர் ரஹ்மானின் மகள் ரஹிமா ரஹ்மான் கீபோர்டில் அந்த பாடலை வாசிக்கும் வீடியோ ஒன்றினை ஏ.ஆர் ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அது தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.