முன்னாள் காதலர் சிம்புவுடன் ஹன்சிகா…!

முன்னாள் காதலர் சிம்புவுடன், மீண்டும் இணைந்துவிட்டார் ஹன்சிகா என சமூகவலைத்தளத்தில் புகைப்படம் ஒன்று வைரலாக பரவி வருகிறது.

இணையத்தில் வைரலாகும் செய்தி அறிந்து அதிர்ச்சியில் ஹன்சிகா அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் நாங்கள் ‘மஹா’ படத்தின் மூலம் ஒன்றாக நடிக்கிறோம் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை தனது டுவிட்டர் மூலம் வெளியிட்டுள்ளார்.

இப்படத்தில் ஒரு நீண்ட கேமியோ ரோலில் சிம்பு நடிக்கிறார். ’மஹா’ படத்தின் சர்ச்சைக்குரிய போஸ்டர்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்நிலையில் இந்த படம் சற்று குழப்பத்தை உண்டாக்கியது.