Random image

முன்னாள் ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் குறித்த சர்ச்சை

டில்லி

விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லன்ஸ் வழக்கில் முன்னாள் ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் சக்ரபோர்த்தி சந்தேகத்துக்குரியவர் என எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 2005 முதல் 2007 வரை சக்ரபோர்த்தி இந்தியன் வங்கியின் தலைவராகவும் 2007 முதல் 2009 வரை பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிர்வாக இயக்குனராகவும் பணி புரிந்தார்.   அதன் பிறகு 2009 முதல் 2014 வரை இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக பணி புரிந்தார்.  தற்போது அவர் லண்டனில் வசித்து வருகிறார்.

எகனாமிக் டைம்ஸ் செய்தி ஊடகம் சிபிஐ க்கு சக்ரவர்த்தி மீது விஜய் மல்லையாவின் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் மற்றும் ஒரு வழக்கில் சம்மந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.  அந்த செய்தியின் படி சக்ரபோர்த்தி மீது வெளிநாடு செல்ல தடை விதிக்கும் லுக் அவுட் நோட்டிஸ் பிறப்பிக்கப்பட்டதாகவும் அதன் பிறகு அந்த நோட்டிஸ் விலக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு சக்ரபோர்த்தியின் வழக்கறிஞர்கள் மறுப்பு தெரிவித்துள்ள்னர்.   இது குறித்து அவர்கள் எகனாமிக் டைம்ஸ் ஊடகத்துக்கு அளித்த ஈ மெயில் செய்தியில், “கே சி சக்ரபோர்த்தியின் வழக்கறிஞராகிய நாங்கள் அவர் மேல் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தவறானவை என தெரிவிக்கின்றோம்.  அவர் குற்றமற்றவர் என்பது ஏற்கனவே நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு அதன் பிறகு அவர் மீதான லுக் அவுட் நோட்டிஸ் திரும்பப் பெறப்பட்டது” என தெரிவித்துள்ளனர்.