“முன் அனுபவம் தேவையில்லை!” : இளம் பெண்களை பாலியல் தொழிலுக்கு அழைக்கும் பிரிட்டன் அரசு!

1

 
பிரிட்டிஷ் அரசு,  (direct.gov.uk)  என்ற இணையதளத்தை, இளைஞர்களின் வேலை வாய்ப்பு தகவல்களுக்காக நடத்துகிறது.

பல்வேறுபட்ட வேலைவாய்ப்பு தகவல்கள் வரும் அந்த இணையதளத்தில் சமீப காலமாக, “பாலியல் தொழிலுக்கு இளம்பெண்கள் தேவை” என்ற அறிவிப்பும் வர ஆரம்பித்திருக்கிறது.

ஆமாம்…  இரவு விடுதிகளில் பாலியல் தொழில் போன்ற வேலைகளுக்கு வெற்றிடம் இருப்பதாக தகவல்களைக் கொட்டுகிறது, பிரிட்டன் அரசு நடத்தும் அந்த இணையதளம்.

வேலையில்லாமல் இருக்கும் 18 – 24 வயதுக்குட்பட்ட இளம்பெண்களை அதற்கு விண்ணப்பிக்குமாறு கூறுகின்றது.

அதில் வெளியான ஒருவிளம்பரத்தில் இப்படி கூறப்பட்டிருக்கிறது:

“இளைஞர்களுடன்  மாலை நேரங்களில் வெளியே செல்வதற்கும், உடலுறவு கொள்வதற்கும் பெண் தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர். இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவரின் இனம், தோற்றம் முக்கியமில்லை. ஒரு செல்போன் மட்டுமே அவசியம்.   முன் அனுபவம் தேவையில்லை.”

 

Leave a Reply

Your email address will not be published.