முல்லை பெரியாறு அணை: கண்காணிப்பு குழு ஆய்வு

 

தேனி: முல்லை பெரியாறு அணை இன்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தமிழக அரசின் வழக்கில் உச்ச நீதிமன்றம்  2014ம் ஆண்டு  பிறப்பித்த உத்தரவின்படி முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டம் 142 அடியாக உயர்த்தப்பட்டது.

periyar dam

அணையில் தண்ணீர் தேக்குவதை கண்காணிப்பதற்காக மூன்று பேர் கொண்ட கண்காணிப்பு குழுவையும் உச்ச நீதிமன்றம் நியமனம் செய்தது. இந்த குழுவில் மத்திய அரசின் நீர்வளம் சார்பாக ஒரு அதிகாரியும், கேரளா அரசின் சார்பாக ஒரு பிரதிநிதியும், தமிழக அரசின் சார்பாக பிரதிநிதியும் இடம்பெற்றுள்ளனர்.

ஒவ்வொரு முறையும் அணையின் நீர் மட்டம் உயரும் போதெல்லாம் இந்த குழு அணையை கண்காணித்து வருகிறது.  தற்போது கேரளாவில் மழை பெய்து வருவதால் முல்லை பெரியார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆகவே மத்திய குழுவினர் தற்போது ஆய்வை தொடங்கியுள்ளனர். இந்த குழுவில் தமிழக அரசின் சார்பில் பொதுப் பணித்துறை செயலாளர் பிரபாகரன், கேரள அரசின் சார்பில் குரியன் பங்கேற்றுள்ளனர்.