முஸ்லிம் ஆண்கள் இதர பெண்களை கற்பழிக்கலாம்: பேராசிரியரின் பேச்சால் சர்ச்சை

muslim

கெய்ரோ:

‘‘முஸ்லிம் ஆண்கள் இதர பெண்களை கற்பழிப்பது தவறில்லை’’  என்று பேராசிரியர் ஒருவரின் பேச்சு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எகிப்த் கெய்ரோவில் உள்ள அல் அசார் பல்கலைக்கழக பேராசிரியர் சவுத் சலே, ஒரு டிவி நேர்காணலில் கூறியதாவது:

முஸ்லிம் ஆண்கள், இதர முஸ்லிம் அல்லாத பெண்களை இழிவுபடுத்துவதற்காக அவர்களை கற்பழிக்க அல்லா அனுமதி வழங்கியுள்ளார். நியாயமான போரின் போது தனது எதிரிகளை முஸ்லிம் ஆண்கள் கற்பழிக்க அனுமதிக்கப்படலாம். அடிமைப் பெண்களிடம் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளும் நியாயமான வழியை அல்லா வழங்கியுள்ளார்.

அடிமைத்தனம் என்பது இஸ்லாமியத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது. ஆனால், சில வற்றை ஒழுங்கு படுத்துவதற்காக யார் வேண்டுமானாலும் ஆண்கள், பெண்களை வர்த்தக ரீதியில் வாங்கலாம். நியாயமான அடிமை என்பது போர் கைதியாக இருக்க வேண்டும். போரில் கைது செய்யப்படும் பெண்களை யார் வேண்டுமானாலும் சொந்தமாக்கி கொள்ளலாம்.
அவர்களை இழிவுபடுத்தும் வகையில், அந்த பெண்கள் ராணுவ கமாண்டர் அல்லது முஸ்லிம் சொத்தாக மாறிவிடுகிறது. அத்தகைய பெண்களிடம் மனைவியிடம் எவ்வாறு செக்ஸ் உறவு வைத்துக் கொள்வோமோ அது போல செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ப்ளோரிடா நாட்டு கல்லூரி வரலாற்று பேராசிரியர் ஆண்ட்ரு ஹோல்ட் இந்த கருத்து குறித்து கூறுகையில்,‘‘ ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த, மதிப்புமிக்க சன்னி இஸ்லாமிய பல்லைக்கழகத்தில் உள்ள இந்த பேராசிரியரின் கருத்து இதயத்தை பிளப்பது போல் உள்ளது.
இவரது கருத்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் பெண்களுக்கு எதிராக நடத்தி வரும் காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு அங்கிகாரம் வழங்குவது போல் உள்ளது. யாழிதிஸ் மற்றும் இதர மத பெண்களுடன் அடிமைத்தனமான செக்ஸ் உறவில் ஈடுபடுத்துவது, திருமணத்திற்கு முன் உறவு கொள்ளுதல் மற்றும் விபச்சாரம் செய்வது ஆகியவை பாவச் செயலாகும். இறுதி போர் நடக்கவுள்ளது என்பதற்கான அறிகுறியே இது’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published.