22-nov-bangladesh-opp

 

டாக்கா:  

ங்களாதேஷில் எதிர்க்கட்சித் தலைவர்கள் இருவரின் தூக்கு தண்டனை, இன்று அதிகாலை நிறைவேற்றப்பட்டது.

தனது ஒரு அங்கமாக இருந்த பங்களாதேஷை, அடிமை நாடாகவே பாகிஸ்தான் நடத்திவந்தது. இதனால் பாகிஸ்தானிடமிருந்து பிரிந்து சுதந்திரமடைய பாங்களாதேஷ் மக்கள் போராட்டம் நடத்தினர். அங்கு கலவர சூழல் ஏற்படவே ஏராளமான பாங்களாதேshiகள் இந்தியாவுக்கு அகதிகளாக வந்தனர்.

ஆகவே அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி பாகிஸ்தான் மீது போர் தொடுத்து, பங்களாதேஷுக்கு விடுதலை பெற்றுத்தந்தார்.

அந்த காலகட்டத்தில் பங்களாதேஷ் மக்கள் அனைவரும் சுதந்திரத்தை விரும்பினர். ஆனால் மிகச் சிலர், பாகிஸ்தான் ராணுவத்துடன் சேர்ந்துகொண்டு பலவித மனித உரிமை மீறல்களை செய்தார்கள். அவர்களில் முக்கியமானவர்கள் இஸ்லாமியக் கட்சித் தலைவர் அலி அசன் முகமது முஜாஹித், பங்களாதேஷ் தேசியக் கட்சி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சசாலுதீன் ஆகியோர் ஆவர்.

இது தொடர்பான வழக்கு நீண்டகாலமாக நடைபெற்று, இருவருக்கும் தூக்குதண்டனை விதிக்கப்பட்டது.

இருவரும் அனுப்பிய கருணை மனுவை பங்களாதேஷ் அதிபர் அப்துல் ஹமீத் நிராகரித்தார். இதையடுத்து இன்று காலை அவர்கள் இருவருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

“இருவேறு மேடைகளில் ஒரே நேரத்தில் அவர்கள் தூக்கிலிடப்பட்டார்கள்” என்று பங்களாதேஷ் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

(படம் நன்றி: ராய்ட்டர்)

.