மெக்சிகோ: விமான விபத்து – அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த 101 பயணிகள்

மெக்சிகோவில் பயனிகள் விமானம் விபத்திற்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக 101 பயணிகள் உயிர் தப்பினர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் விபத்திற்குள்ளானதாக தகவல் கூறப்பட்டுள்ளது.

null

AM2431 என்ற எண் கொண்ட மெக்சிகோ விமானம் கவுடலுப் விக்டோரியா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மெக்சிகோ நோக்கி சென்றது. அப்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் விபத்திற்குள்ளானது. விமானத்தின் முன்பகுதியில் தீப்பற்றியதை அடுத்து அவசரமாக தரையிறக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் துரிதமாக செயல்பட்டு பயணிகளை மீட்டனர். இதனால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது என்று விமான நிலையத்தின் சார்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த விபத்தை தொடர்ந்து விக்டோரியா சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. இது குறித்து மெக்சிகோ அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் “ விமான விபத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. விமானத்தில் பயணம் செய்த 101 பயணிகளில் 85 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் இருவரது நிலைமைக் கவலைக்கிடமாக உள்ளது. விமானம் விபத்துக்குள்ளானது குறித்து உரிய விசாரணை நடந்து வருகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து பாதிப்பிற்குள்ளானவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு அரசுக்கு மெக்சிகோ பிரதமர் எண்டிரிகுயு பினா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.