மெஜாரிட்டி கிடைக்காது என்று பயப்படுகிறாரா ஜெயலலிதா?

1

கடந்த நாடாளுமன்ற தேர்தல் போல தனித்து போட்டியிடாமல், சில சிறு கட்சிகளுடன் கூட்டணி வைத்திருந்தாலும், அனைத்து தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிடுகிறார்கள் அ.தி.மு.க. சார்பான வேட்பாளர்கள்.  இதையடுத்து ஜெயலலிதா மிக தைரியமானவர் என்று பொதுவான அபிப்பிராயம் நிலவுகிறது..

ஆனால், வரும் தேர்தலில் அ.தி.மு.க. முழுமையான பெரும்பான்மை பெறாது என ஜெயலலிதா பயப்படுகிறாரோ என்கிற எண்ணத்தை, அவரது பிரச்சாரம் ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னையில் நடந்த அதிமுக பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் திமுகவை கடுமையாக விமர்சித்த ஜெயலலிதா, மற்ற கட்சிகளைப் பற்றி பேசவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மதுவிலக்கு தொடர்பாக அறிவிப்பு வெளியிட்ட  ஜெயலலிதா,  தமிழகத்தில் இருந்த மதுவிலக்கை நீக்கியது திமுகதான், அக்கட்சியே திமுகதான் தமிழக மக்களை அதிகம் குடிக்க வைத்தது என கடுமையாக விமர்சித்தார். ஆனால் பாஜk, காங்கிரஸ், தேமுதிக, பாமக, மக்கள் நலக் கூட்டணியின் கட்சிகள் உள்ளிட்ட எந்த ஒரு கட்சியையும் அவர் விமர்சிக்கவில்லை.

இதற்குக் காரணம், “வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. முழு மெஜாரிட்டி பெறாவிட்டால், இக்கட்சிகளின் ஆதரவில் ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்படும். ஆகவே அந்த கட்சிகளை விமர்சிக்க வேண்டாம்” என்று ஜெயலலிதா முடிவெடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

“ஆக, முழு மெஜாரிட்டி கிடைக்குமோ இல்லையோ என்கிற பயத்தில் ஜெயலலிதா இருக்கிறார். அதனால்தான் இதுவரை மதுவிலக்கு பற்றி பேசாத அவர், மதுவிலக்கு படிப்படியாக கொண்டுவரப்படும் என்று பேசினார்” என்றும் கூறப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி