மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் 8 கட்டமாக நடைபெறும் : சுனில் அரோரா 

டில்லி

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறும் எனத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.

தற்போது தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் மற்றும் கேரளா உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை|அறிவித்துள்ளார்.  இதில் தமிழகத்திலும் புதுச்சேரியிலும் ஒரே கட்டமாக ஏப்ரல் 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளன.  இந்த வாக்குப்பதிவுகள் வரும் மார்ச் மாதம் 27 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 29 ஆம் தேதி முடிவடைகிறது.   அனைத்து மாநிலங்களில் பதிவாகும் வாக்குகளும் வரும் மே மாதம் 2 ஆம் தேதி எண்ணப்பட உள்ளன.  மேற்கு வங்கத்தில் மொத்தம் 294 தொகுதிகள் உள்ளன.

மேற்கு வங்கத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவு மார்ச் 27, இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு, ஏப்ரல் 1, மூன்றாம் கட்டம் ஏப்ரல் 6, நான்காம் கட்டம் ஏப்ரல் 10, ஐந்தாம் கட்டம் ஏப்ரல் 17, ஆறாம் கட்டம் ஏப்ரல் 22, ஏழாம் கட்டம் ஏப்ரல் 26 மற்றும் எட்டாம் மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29 அன்று நடைபெற உள்ளன..