download
சர்ச்சை நாயகி, நயன்தாரா பற்றி அடுத்த சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.  மலேசியா சென்ற அவரை, கோலாலம்பூர் விமான நிலையத்தில் அதிகாரிகள் மடக்கியதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது.  இதற்குக் காரணம் என்ன என்று பலவித தகவல்கள் உலாவந்தன.
“நயன்தாராவின் உண்மை யான பெயர் டயானா மரியம் குரியன். ஆனால், படத்துக்காக தனது பெயரை நயன்தாரா என்று மாற்றினார். மேலும், அவர் பிறந்த ஊர் கர்நாடகா மாநிலம் பெங்களூரு என்று பாஸ்போர்ட்டில்  இருக்கிறது. ஆனால் அவரது சொந்த ஊர் கேரளா   கோலாலம்பூர் ஏர்போர்ட்டில்  அவரது பாஸ்போர்ட்டில் இருந்த பெயர், ஊர் குறித்து விசாரணை நடந்தது” என்று செய்தி பரவியது. அவர் விசாரணையில ்இருப்பது போல படமும் வெளியானது. ( இந்த படம், அவர் நடித்த படத்தில் ஒரு காட்சி என்கிறார்கள் இப்போது.)

“அதெல்லாம் இல்லை. பல நாடுகளுக்கு நயன்தாரா சென்று வந்திருக்கிறார்.  குறிப்பாக மலேசியாவுக்கும் பலமுறை சென்று வந்திருக்கிறார். ஆகவே பாஸ்போர்ட் பெயர் குழப்பம் என்பதெல்லாம் உண்மையல்ல..” என்ற தகவல் பரவியது.
பிறகு ஏன் நயன்தாரா விசாரணைக்கு உள்ளானார்?
தற்போது பரவி வரும்  தகவல் பதைபதைக்க வைக்கிறது.
“மலேசியாவில் தடை செய்யப்பட்ட போதை பொருள் ஒன்று நயன்தாராவின் டிராவல் பேக்கில் இருந்தது. இதுதான் விசாரணை வளையத்துக்குள் அவர் வர காரணம்.  பிறகு செல்வாக்கு மிக்க சிலர், தங்களது தொடர்புகளை பயன்படுத்தி நயன்தாராவை விசாரணை வளையத்தில் இருந்து மீட்டார்கள்” என்பதுதான் அந்த பதைபதைக்க வைக்கும் தகவல்.
அதே நேரம், மலேசியாவில் சினிமா தொடர்புள்ள சிலரிடம் பேசியபோது, வேறுவிதமாகச் சொல்கிறார்கள்:  “நயன்தாராவுக்கு மது பழக்கம் உண்டு என்பது அனைவருக்கும் தெரியும். அவர் மயக்கத்தில் இருந்த நிலையில் எடுக்கப்பட்ட படங்கள் இன்னும் இணையத்தில் உலவிக்கொண்டுதான் இருக்கின்றன.
விமான பயணத்திலும் மது அருந்தியிருக்கிறார்.  கோலாலம்பூர் ஏர்போர்ட்டில் நயன்தாரா இறங்கினாரே தவிர, போதை இறங்கவில்லை. அந்த நேரத்தில் விமான நிலைய அதிகாரிகள் வழக்கமான கேள்விகளை கேட்டார்கள். அதற்கு பதில் சொல்லிவிட்டு  வந்திருக்கலாம். ஆனால் அவர் சும்மா இருந்தாலும், அவருக்குள் இறங்கிய போதை சும்மா இருக்கவிடவில்லை. எக்குதப்பாக பதில் சொல்லியிருக்கிறார். இதனால் ஆத்திரமான அதிகாரிகள், நயன்தாராவை பிடித்து வைத்து விசாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
பிறகு நயன்தாராவின் நலம் விரும்பிகள் சிலர்,  அதிகாரிகளை தொடர்புகொண்டு பேசி அவரை மீட்டார்கள். இதுதான் நடந்தது. அதற்குள் பாஸ்போர்ட், போதை வஸ்து என்று ஏதேதோ தகவல் பரவ ஆரம்பித்துவிட்டது!” என்கிறார்கள்.