மோகன்லால் பிறந்த நாளில்  ஹிட்டான இருவர் ஐஸ்வர்யா ராய்..

மோகன்லால் பிறந்த நாளில்  ஹிட்டான இருவர் ஐஸ்வர்யா ராய்..

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் சென்னையில், தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ள நிலையில், அவரது 60 -வது பிறந்த நாள் நேற்று எளிமையாகக் கொண்டாடப்பட்டது.

 கமலஹாசன்,மம்மூட்டி, உள்ளிட்டோர் மோகன்லாலுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

‘’உங்கள் நடிப்பில் நான் பொறாமைப்படுகிறேன்’’ என்று தனது ஸ்டெயிலில் ‘வாழ்த்து ‘’ கூறி இருந்தார், உலக நாயகன்.

இது ஒருபுறம் இருக்க சமூக வலைத்தளங்களில் மோகன்லால் ரசிகர்கள்-

மோகன்லாலும், ஐஸ்வர்யா ராயும் ’’இருவர்’’ படத்தில் தோன்றும் ரொமான்ஸ் காட்சியை நேற்று பகிர்ந்து இருந்தனர்.

 மணப்பெண்ணான ஐஸ்வர்யா ராயும், மோகன்லாலும் சேர்ந்து இருக்கும், ’இருவர்’ படத்தின் புகைப்படமே அது.

இந்த புகைப்படம்  வலைத்தளங்களில், வைரலாகி வருகிறது.

எம்.ஜி.ஆர்./கருணாநிதியின் சினிமா மற்றும் அரசியல் வாழ்க்கையை இருவர் படத்தில் மணிரத்னம் சித்தரித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. .

– ஏழுமலை வெங்கடேசன்