மோடி அரசின் முகத்தில் விழுந்த ‘குத்து’: ஆதார் தீர்ப்பு குறித்து காங்கிரஸ் கருத்து

--

டில்லி:

தார் கட்டாயம் என்று அறிவித்த மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், இன்று வெளியாகி உள்ள உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு மோடி தலைமையிலான மத்திய அரசின் முகத்தில் விழுந்த அடி என்று காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்து உள்ளது.

அனைத்துவிதமான பரிவர்த்தனைகளுக்கும் ஆதார் தேவை என மத்திய அரசு அறிவித்தது. இது தனி மனித சுதந்திரத்தை தகர்ப்பதாக உச்சநீதி மன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதி மன்ற அரசியல் சாசன அமர்வு  இன்று பரபரப்பான தீர்ப்பை வழங்கி உள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அசோக் மனு சிங்வி, ஆதார் தொடர்பான சட்டப்பிரிவு 57 குறித்து உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ள கருத்து, மோடி அரசுக்கு விழுந்த அடி என்று கூறி உள்ளார்.

அபிசேக் மனு சிங்வி

மேலும், தனியார் நிறுவன சேவைகளுக்கு  ஆதார் தேவையில்லை என்றும் அவர்களுக்கு கொடுக்கக்கூடாது என்றும். அதுபோல ஏற்கனவே தனியார் நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்ட தகவல்கள் அழிக்கப்பட வேண்டும் என்றும்  உச்சநீதி மன்றம்  கூறி உள்ளது. இது பாஜக அரசின் முகத்தில் விழுந்த குத்து என்ற சிங்வி,  உச்சநீதி மன்றத்தின் இந்த தீர்ப்பை காங்கிரஸ் கட்சி வரவேற்பதாகவும் தெரிவித்து உள்ளார்.

You may have missed