மோடி பயண திட்ட கசிவு விசாரணை சிபிசிஐடி.க்கு மாற்றம்

சென்னை:

மோடி பயணம் திட்டம் கசிந்தது குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த மார்ச் 12ம் தேதி காஞ்சிபுரம் திருவிடந்தையில் நடந்த ராணுவ கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அவரின் பயண விபரம் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. ஆனால் இது முன்கூட்டியே சமூக வலைதளங்களில் வெளியானது.

இதனால் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு போராட்டம் நடத்த வசதியாக போய்விட்டது. பயண விவரம் முன்கூட்டியே வெளியானது தான இதற்கு காரணம் என உளவுத் துறை தெரிவித்தது. இது குறித்து காஞ்சிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீசாக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.