ம.பி. தேர்தல்: பாஜ அமைச்சர்கள் 12 பேர் தோல்வி….

போபால்:

த்திய பிரதேச சட்டமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணிக்கை முடிந்து இறுதி முடிவு அறிவிக்கப் பட்டு உள்ளது. இதில் மாநில அமைச்சர்களாக பதவி வகித்த 12 பேர் படுதோல்வி அடைந்துள்ள னர். இது பாஜக தலைமைக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

15 ஆண்டுகளாக மாநிலத்தில் ஆட்சி செய்து வந்த பாஜக, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் அசத்தலான அரசியல் வியூகம் மற்றும் கடின உழைப்பின் பயனமாக   114 இடங்களை கைப்பற்றி சாதனை படைத்து,  ஆட்சி அமைக்க உரிமை கோரி உள்ளது.

பாஜகவின் கோட்டையாக கருதப்பட்டு வந்த மத்திய பிரதேச மாநிலத்தில் , பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருப்பது வரலாற்று முக்கியத்துவம் பெற்றுள்ளது. அடுத்த ஆண்டு வர உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு அச்சாரமாக கருதப்படுகிறது.

இந்த நிலையில்,  கடந்த 2005ம் ஆண்டு மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் பாஜகவுக்கு இது பேரிடியாக விழுந்துள்ளது. 15 ஆண்டுளுக்கும் மேலாக  மத்தியபிரதேச முதல்வராக பாஜகவை சேர்ந்த சிவ்ராஜ்சிங் சவுகான் இருந்து வருகிறார். தற்போது நடந்து முடிந்துள்ள சட்டமன்ற தேர்தலில் அவர் வெற்றி பெற்றாலும் பாஜக படு தோல்வி அடைந்துள்ளது. அவரது அமைச்சரவையில் பதவி வகித்து வந்த 12 அமைச்சர் கள் தோல்வியை சந்தித்துள்ளனர். பாஜக தலைமைக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் கடும் உழைப்பால் மத்திய பிரதேசத்தில் 15 ஆண்டுகால பாஜக ஆட்சிக்கு  முடிவுகட்டப்பட்டு காங்கிரஸ் அரியாசனம் ஏறுகிறது.