ரஜினிகாந்துடன் மீண்டும்  இணைவதில் மகிழ்ச்சி : டிவிட்டரில் சந்தோஷ் சிவன்

ளபதிக்கு பிறகு மீண்டும் இணையும் ரஜினி – சந்தோஷ் சிவன்

ஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்க உள்ளார்.  ஏற்கனவே 2.0  மற்றும் பேட்ட  படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்துக்காக ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.   இந்த படத்துக்கு  ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து சந்தோஷ் சிவன் தனது டிவிட்டரில், “தளபதி படத்துக்கு பிறகு நான் மீண்டும் ரஜினி சாருடன் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.    சுமார் 27 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்து பணி புரிய உள்ளனர்.

சந்தோஷ் சிவன், ஒளிப்பதிவாளர் மட்டுமின்றி இயக்குனர், தயாரிப்பாளர் நடிகர் என பன்முகம் கொண்டவர்  ஆவார்.  இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் பணி ஆற்றி உள்ளார்.  ஒளிப்பதிவுக்காக 5 முறை தேசிய விருதும் பத்மஸ்ரீ விருதும் சந்தோஷ் சிவன் பெற்றுள்ளார்.