ரஜினியின் 2.0 பட மேக்கிங் வீடியோ வெளியீடு

சென்னை :

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘2.0’ படத்தின் படப்பிடிப்புப் பணிகள் முடிந்துவிட்டன. இந்நிலையில் அந்தப் படத்தின் மேக்கிங் வீடியோவை இயக்குநர் ஷங்கர் இன்று வெளியிட்டார்.

இதில் ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்ஸன் நடித்து வருகிறார். பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ரூ.400 கோடி செலவில் தற்போது இப்படம் உருவாகி வருகிறது. 2.0 படப்பிடிப்புகள் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இப்படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். லைகா நிறுவனம் அதிக பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது. எந்தத் தமிழ்ப் படத்திற்கும் இல்லாத அளவுக்கு பயங்கரமாக விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு 2.0 போஸ்டரோடு ராட்சத பலூன்கள் பறக்கவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வரும் தீபாவளிக்கு இப்படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால், கிராபிக்ஸ் பணி காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் படம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி