ரஜினி அப்செட்: பார்ட் 2 : வெளிநாடு பயணம்?

12106923_1162788500464924_3112216380186517881_n

பாலி படப்பிடிப்பு தாமதமாகி வருவது பற்றியும், ரிலீஸ் தேதி தள்ளிப்போவது பற்றியும் எழுதியிருந்தோம்.  இதனால் ரஜினி அப் செட் ஆனது பற்றியும் குறிப்பிட்டிருந்தோம்.

இப்போது அடுத்த கட்ட தகவல்:

பொதுவாக தனது படத்தின் படப்பிடிப்பு துவங்கிவிட்டால், பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை ரஜினி தவிர்ப்பார்.  தான் நடிக்கும் படம் தொடர்பான நபர்களைத் தவிர வெளியாட்களை சந்திப்பதைக்கூட தவிர்த்துவிடுவார். அந்த அளவுக்கு  டெடிகேசனோடு நடிப்பவர்.

மொத்தமாக கால்சீட் கொடுத்தும், தொடர்ந்து படப்பிடிப்பு இல்லை.  ஆகவே, “நீங்க கூப்பிடும்போது நடிக்க வர்றேன்” என்று இயக்குநர் ரஞ்சித்தை அழைத்து சொல்லிவிட்டார்.

அந்த அப்செட்டின் வெளிப்பாடுதான், கடந்த 3ம் தேதி,  ஐ.எஸ்.எல். கால்பந்து தொடக்க விழாவில் கலந்துகொண்டது. அந்த விழாவில் உற்சாகமாய் கலந்துகாண்ட ரஜினி, கையில் பந்துடன் மைதானத்தை வாகனத்தில் வலம் வந்தார்.   ஐ.எஸ்.எல். சேர்மன் நிதா அம்பானியிடம் ஒப்படைத்து வாழ்த்து தெரிவித்தார்.    கேரள பிளாஸ்டர்ஸ் அணியின் உரிமையாளர்களின் ஒருவரான சச்சினைக் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு,  ஐஸ்வர்யா மற்றும் ஆலியா பட் ஆகியோரையும் வாழ்த்தினார்.

இது வழக்கத்துக்கு மாறானது.

அதுமட்டுமல்ல..  குறுகியகால வெளிநாட்டு பயணம் செல்லவும் திட்டமிட்டிருக்கிறார்”  என்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.