ரஜினி, கமல் தொடங்கி வைக்கும் நட்சத்திர கிரிக்கெட்

rajini crket
நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கு நிதி திரட்டுவதற்காக, சென்னையில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. நாளை காலை 10 மணி முதல், இரவு 10 மணி வரை சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது.
போட்டியை ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் தொடங்கி வைக்கிறார்கள்.

இந்த கிரிக்கெட் போட்டியில் 8 அணிகள் மோதகின்றன. இதில் ஒவ்வொரு அணி சார்பிலும் 6 பேர் வீதம் 48 நடிகர்கள் ஆடுகிறார்கள்.

இந்த அணிகள் ஒவ்வொன்றிலும் 9 நடிகர்கள் இடம் பெற்றுள்ளனர். அதில் 6 பேர் களம் இறங்குகிறார்கள். ‘நாக் அவுட்’ முறையில் இந்த போட்டி நடைபெறுகிறது. ஒருமுறை மோதி தோல்வி அடையும் அணி போட்டியில் இருந்து விலகும். அரை இறுதியல் வெற்றி பெறும் அணிகள் இறுதி போட்டியில் மோதும். காலை 10 மணிக்கு தொடங்கும் போட்டி இரவு 10 மணி வரை நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் சங்க தலைவர் நாசர் உள்ளிட்ட நடிகர்கள், நடிகைகள் சமந்தா, தமன்னா, சுருதிஹாசன், கேத்தரின் தெரசா உள்ளிட்ட நடிகைகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்கிறார்கள்.