ரணில் அமைச்சரவையில் மீண்டும் பதவி ஏற்ற தமிழ் பெண்அமைச்சர் விஜயகலா!

கொழும்பு:

லங்கையில் நடைபெற்று வந்த அரசியல் குழப்பங்கள் இலங்கை உச்சநீதி மன்றத்தின் அதிரடி தீர்ப்பு காரணமாக முடிவுக்கு வந்துள்ள நிலையில், பிரதமராக ரணில் விக்கிரம சிங்கே பதவி ஏற்றார்.

ரணில் அமைச்சரவையில், ஏற்கனவே அமைச்சராக இருந்து வந்த தமிழரான விஜயகலா, விடுதலைப்புலிகள் குறித்து பேசியதால் பதவி இழந்த நிலையில், தற்போது மீண்டும்  அமைச்சராக பதவி ஏற்றார்.

இலங்கை உச்சநீதி மன்ற தீர்ப்பை தொடர்ந்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான புதிய அமைச்சரவை  பதவியேற்றுள்ளது. அதிபர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் ரணில்  அமைச்சரவை பொறுப்பேற்றுக்கொண்டது.

ஆனால்,  பாதுகாப்பு மற்றும் காவல் துறையை பிரதமருக்கு ஒதுக்க மறுத்து,  அதிபர் மைத்ரிபால சிறிசேன தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.

இந்த நிலையில் ரணில் அமைச்சரவையில் மீண்டும் விஜயகலா மகேஷ்வரனுக்கு பதவி வழங்கப்பட்டு உள்ளது. இவர் ஏற்கனவே விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதால், கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து கைது செய்யப்பட்டு,  பதவியை ராஜினாமா செய்த நிலையில், தற்போது மீண்டும் அமைச்சராக பதவி ஏற்றுள்ளார். விஜயகலா மகேஷ்வரனுக்கு தற்போது  கல்வித்துறை இணைஅமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.

ரணில் அமைச்சரவையில் குழந்தைகள் நலத்துறை இணையமைச்சராக இருந்தவர் தமிழரான  விஜயகலா மகேஸ்வரன். இவர் கடந்த ஜூன் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று தற்போதைய சூழலைவிட, விடுதலை புலிகள் காலத்தில் மக்கள் பாதுகாப்பாக இருந்ததாக அதிபர் சிறிசேனாவுக்கு எதிராக பேசியதால், சர்ச்சை ஏற்பட்டதை தொடர்ந்து, தனது அமைச்சர் பதவியை தூக்கி எறிந்தது குறிப்பிடத்தக்கது.

You may have missed