: ரன்வீர் ஷாவின் திருவையாறு இல்லத்தில் இன்று திடீர் சோதனை

திருவையாறு

திருவையாற்றில் உள்ள தொழிலதிபர் ரன்வீர் ஷா இல்லத்தில் இன்று சிலை கடத்தல் தடுப்பு ஐ ஜி பொன் மாணிக்கவேல் திடீர் சோதனை நடத்தி வருகிறார்.

தமிழகத்தில் கோவில்களில் இருந்து சிலை கடத்துவது அதிகமாகி வருகிறது.    சிலைக் கடத்தல் பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் தஞ்சை மற்றும் புன்னை நல்லூர் கோவில்களில் சோதனை  செய்யும் போது பல சிலைகள் மாற்றப்பட்டதை கண்டறிந்தார்.   அதை ஒட்டி குஜராத் மாநில அருங்காட்சியகத்தில் இருந்து ராஜராஜ சோழன், உலகமாதேவி ஆகியோர் சிலைகள் மீட்கப்பட்டன.

அத்துடன் அவர் சென்னை தொழிலதிபர் ரன்வீர் ஷா வின் சென்னை வீட்டில் சோதனை இட்டபோது 91 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.  இது மக்களை கடும் அதிர்சியில் ஆழ்த்தியது.   நேற்று தஞ்சை பெரிய கோவிலில் பொன் மாணிக்கவேல் திடீர் ஆய்வு நடத்தினார்.

தொழிலதிபர் ரன்வீர் ஷாவின் அரணமனை போன்ற பங்களா இல்லம் திருவையாற்றில் அமைந்துள்ளது.   இன்று அந்த இல்லத்தில் பொன் மாணிக்கவேல் தனது குழுவினருடன் திடீர் என ஆய்வு செய்துள்ளார்.  இந்த ஆய்வு இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது