ரவுடிகளைப்போல் செயல்பட்ட அரசு ஊழியர்கள்!: பூமொழி, தமிழக மக்கள் உரிமை கட்சி

12717224_834176273358571_2623346235821540217_n

ல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தி வரும் தமிழக அரசு ஊழியர்கள், நேற்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாகச் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகளிடம் அத்து மீறல்களிலும், நாகரீகமற்ற முறையில் அநாகரீகமாகவும், தகாதவார்தைகளால் திட்டியும் மரியாதை குறைவாக தரம் தாழ்ந்து நடந்து கொண்டனர்.

இதன் உச்சகட்டமாக, அவ்வழியே வாகனத்தை தள்ளிக்கொண்டு சென்ற பொதுமக்களில் ஒருவரை கீழே தள்ளிவிட்டு, அவரின் கண்ணத்தில் அறைந்து அரசு ஊழியர்கள் ரவுடிகளாக செயல்பட்டது, அவ்வழியே சென்ற பொது மக்களின் மனதை பெரிதும் புண்படுத்தியது.

மேலும், ஆட்சியர் அலுவலகம் நேர் எதிரே உள்ள அரசு தலைமை மருத்துவமனை மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளுக்கு அவ்வழியேச்சென்ற ஆம்புலன்ஸ் வாகனங்களுக்குக்கூட வழி விடாமல், கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் செயல் பட்டனர்.

பூமொழி
பூமொழி

அரசு ஊழியர்கள் செய்த அத்தனை ரவுடித்தனங்களையும், அத்து மீறல்களையும் காவல்துறையினர் கைகட்டி வேட்டிக்கை பார்த்தது வெட்கக்கேடாக இருந்தது. இதனை தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

நியாயமான அடிப்படைத் தேவைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மறியல் போராட்டங்கள் செய்தால், அவர்கள் மீது இதே காவல்துறை எந்தளவுக்கு கடுமையாகத் தடியடி என்ற பெயரில் தாக்குதல்கள் நடத்தி, மண்டையை உடைத்திருப்பார்கள்…. மறியலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்து சிறையிலும் அடைத்து தங்களின் வீரத்தை….? காட்டியிருப்பார்கள் காக்கிகள்.

அரசு ஊழியர்களே, சாதாரண மக்கள் தங்களின் நியாயமான காரணங்களுக்காக பிரச்சனைகளுக்காக உங்களைக் கண்டித்து, உங்கள் அலுவலகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டால், உங்கள் உள்ளம் எவ்வாறெல்லாம் கொதிக்கும் என்பதை நீங்களே உணறுங்கள். மக்களுக்காகதான் நீங்கள் என்பதை உள்ளூர உணர்ந்து செயல்படுங்கள். நீங்கள் எஜமானர்கள் அல்ல என்பதையும், மக்களின் வரிப்பணம் வாங்கும் மக்களுக்கான வேலையாட்கள் என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள். போராட்டம் என்ற பெயரில் நீங்கள் செய்யும் ரவுடித்தனங்களால், உங்களின் நியாயமான கோரிக்கைகள் வீணடிக்கப்பட்டுவிடும் என்பதை உணருங்கள் என, உங்கள் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவளித்து, தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி உங்களை வலியுறுத்துகிறது.

1 thought on “ரவுடிகளைப்போல் செயல்பட்ட அரசு ஊழியர்கள்!: பூமொழி, தமிழக மக்கள் உரிமை கட்சி

 1. சென்னை, கேளம்பாக்கத்தில் இயங்கிவரும் Parpharma மருந்து கம்பெனியில் வட நாட்டவர் ஆதிக்கம். புதிதாக நிர்வாக மற்றும் மேலாளர் பதவிகளில் தமிழர்களை சேர்ப்பதில்லை, மற்றும் ஏற்கனவே பணியில் இருந்தால் பதவிநீக்கம்தான்.

  கடைநிலை பணிகளில் மட்டும்தான் தமிழர்களுக்கு பணியிடம்.

  எல்லா உயர்நிலை பதவிகளிலும் வடநாட்டவர் மட்டுமே.
  பிழைக்க வந்த இடத்தில் அடாவடித்தனம்.
  சொந்த மாநில சொந்த ஊரிலேயே தமிழனின் கதி அதோகதி.

  தமிழின கட்சிகள் கண்டுகொள்ளுமா? இந்த அநியாயத்தை.

Leave a Reply

Your email address will not be published.