ராணுவ ரகசியம் ஆர்எஸ்எஸ் கைக்கு எப்படி போனது?: ரஃபேல் விவகாரத்தில் புதிய சர்ச்சை

புதுடெல்லி:

பாதுகாப்பு கருதி ரஃபேல் பேரம் குறித்து நாடாளுமன்றத்தில் பேச மறுத்தார் பிரதமர் மோடி. ஆனால், பாதுகாப்புத் துறையின் பதிலை ஆர்எஸ்எஸ் 2 பக்கங்களுக்கு வெளியிட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ரஃபேல் பேர முறைகேடு குறித்து தி இந்து ஆங்கில நாளேட்டில் என்.ராம் புலனாய்வு கட்டுரை வெளியிட்டிருந்தார். ஆர்எஸ்எஸ் அமைப்பு நடத்திய சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தி இந்து கட்டுரையை மறுத்து மோடியை பாதுகாக்கும் வகையில் நீண்ட உரையாற்றினார்.

அப்போது என்.ராமிற்கு பாதுகாப்புத் துறையின் பதில் என்று 2 பக்கங்கள் கொண்ட ஆவணம்  வழங்கப்பட்டது. இது பாதுகாப்புத் துறை சார்பாக அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. பாதுகாப்பு அமைச்சக செய்தி தொடர்பாளர் கர்னல் அமன் ஆனந்த் என்பவரின் பெயரில் வெளியிடப்பட்டது.

இது அமைச்சகத்தின் விளக்கம் இல்லையே என பத்திரிகையாளர்கள் கேட்டபோது, அமைச்சகத்தின் விளக்கம் பிஐபி இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அதில் ரஃபேல் பேரம் குறித்த பாதுகாப்புத்துறையின் விளக்கத்தை ஆர்எஸ்எஸ் அமைப்பின் பெயரில் வெளியிடப்பட்டிருந்தது.

நாடாளுமன்றத்தில் இதை தெரிவித்தால், பாதுகாப்பு விவகாரம் என்று கூறிய மோடி, அரசின் அனைத்து ஆவணங்களும் ஆர்எஸ்எஸ் கைக்கு எப்படி கொடுத்தார்?

71 ஆண்டுகளுக்கு முன்பு மகாத்மா காந்தி கொலையில் தடை செய்யப்பட்ட ஆர்எஸ்எஸ் இயக்கத்துக்கு நாட்டின் பாதுகாப்பு ரகசியம் ஆர்எஸ்எஸ் கைக்து எப்படி வந்தது என்பது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.

இந்திய ஜனநாயகத்தை விளையாட்டு பொம்மையாக மோடி பாவிக்கிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

 

You may have missed