ராதாரவி

உள்குத்து: ராதாரவி நீக்கம்? போட்டுக்கொடுத்த தியாகு!

டிகர் சங்க தேர்தல் இன்ற நடந்துகொண்டிருக்கும் நிலையில் அணிகளுக்கு இடையேயான மோதல்களோடு உள் குத்து விவகாரங்களும் சூடு பிடித்துள்ளன.

நடிகர்கள் ராதாரவி, தியாகு இருவரும் சரத்குமார் அணியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்கள். இருவரும் தற்போது அ.தி..மு.கவில் இருக்கிறார்கள்.

 

18-1403095059-actor-thiyagu-600

இந்த நிலையில், இன்று காலை வாக்களிக்க வந்த தியாகுவிடம், “நீங்கள் ஏன் போட்டியிடவில்லை” என்று ஒரு நிருபர் கேட்டார், அதற்கு தியாகு, “சரத் அணியில் போட்டியிட நானும் வேட்புமனு தாக்கல் செய்தேன். இதற்கிடையே, “நடிகர் சங்க தேர்தலி்ல அ.தி.மு.க.வினர் அவரவர் விருப்பப்படி வாக்களிக்கலாம். ஆனால் தேர்தலில் போட்டியிடக்கூடாது” என்று முதல்வர் அம்மா கட்டளை இட்டார்கள். அவர்களது உத்தரவை ஏற்று எனது வேட்புமனுவை திரும்பப்பெற்றேன்” என்றார்.

“தியாகு சொல்வது உண்மைதான் என்றாலும், குறிப்பிட்ட அந்த கேள்விக்கு பதில் சொல்வதை தவிர்த்திருக்கலாம். ஏனென்றால் அ.தி.மு.க.வில் இருக்கும் ராதாரவி, சங்கத் தேர்தலில் போட்டியிடுகிறார். ஜெயலலிதா உத்தரவிட்டும் தனது வேட்புமனுவை வாபஸ் வாங்கவில்லை. அதோடு, அ.தி.மு.க. கரை வேட்டி கட்டிக்கொண்டுதான் ஓட்டு கேட்டு வலம் வந்தார். இப்போது தியாகு இப்படி பேசுவதால், அ.தி.மு.கவில் இருந்து ராதாரவி நீக்கப்பட காரணமாகிவிடலாம்” என்கிறது சரத் வட்டாரம்.

“இருவருமே ஆரம்பத்தில் தி.மு.க.வில் இருந்து பிறகு அ.தி.மு.கவுக்கு வந்தவர்கள்” என்று இந்த ஈகோ மோதலுக்கு காரணமும் சொல்லப்படுகிறது.