ராமர் கோவிலை எதிர்ப்பவர்களின் தலையை வெட்டிக் கொல்வோம்!: பா.ஜ.க எம்.எல்.ஏ.

 

ஹைதராபாத்:

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களின் தலையை வெட்டிக்கொல்வோம் என்று  பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங்  பேசியுள்ளது அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.

ஹைதராபாத், கோஷாமால் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருப்பவர், பா.ஜ.க.வைச் சேர்ந்த ராஜா சிங்.

இவர் ஹைதராபாத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது,  “உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில், ராமர் கோவிலை கட்டினால்  கொதித்தெழுவோம் என்று பேசுகிறார்கள்.  அப்படி எச்சரிக்கை விடுப்பவர்களை  நாங்கள் வரவேற்கிறோம். இதுபோன்ற துரோகிகளின் தலையை வெட்டிக் கொல்லத்தான்  இத்தனை வருடங்களாக நாங்கள் காத்திருக்கிறோம்!” என்று பேசினார்.

அவரது பேச்சு நாடு முழுதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.
ராஜா  சிங்,  இதுபோல அதிரடி கருத்துக்களைத் தெரிவிப்பது இது முதல் முறையல்லை. ஏற்கெனவே இதுபோன்று பல முறை  பேசியிருக்கிறார். அதற்காக கைதும்  செய்யப்பட்டிருக்கிறார்.

 

Leave a Reply

Your email address will not be published.