‘ரைட்டா தப்பா’  இயக்குனரின் ’காதலிக்க நேரமுண்டு’

விபி பிலிம் மேக்கர்ஸ் பட நிறுவனம் மூமம் திரைப்படம், குறும்படம் மற்றும் தொலைக்காட்சி சீரியல்களை தயாரித்தவர் புவனா. கடந்த 2005 ஆம் ஆண்டு ’ரைட்டா தப்பா’ என்ற படத்தை தயாரித்து இயக்கி இருந்தார். இது தமிழக அரசின் 2 மாநில விருதுகள் இப்படத்திற்கு கிடைத்தது.


நீண்ட இடை வேளைக்கு பிறகு தற்போது “காதலிக்க நேரமுண்டு” என்ற படத்தை இயக்கி தயாரிக்க இருக்கிறார் புவனா. இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கு முடிந்த பின் தொடங்க இருக்கிறது. இவர் அமெரிக்க சென்று சினிமா துறை பற்றி படித்தபோது ஆங்கில ஸ்கிரிப்ட் ஒன்றும் எழுதி உள்ளார். அடுத்த வருடம் தரமான அறம் சார்ந்த படத்தை அடுத்த வருடம் தர இருக்கிறாராம்.
புவனா மீடியா என்ற இணையதளத்தை யும் யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார். விஜய்சேதுபதியை ஒரு குறும்படத்தில் அறிமுகப்படுத்தினார். இந்த குறும்படம் 2009-இல் வெளியானது. அடிப்படை யில் புவனா ஒரு பத்திரிக்கையாளர் ஆவார்.