m 1

“ஆறு லட்சம் கிராமங்களை இன்டர்நெட்டால் இணைக்கும் “டிஜிட்டல் இந்தியா”பிரதமர் மோடி அறிவிப்பு.மோடியின் திட்டம் மகத்தானது என பல கார்ப்பரேட் இன்டெர்நெட் நிறுவனங்கள் வரவேற்பு.

பேஸ்புக் ஓனர் மார்க் ஒருபடி மேலே சென்று-தன் புரோபைல் பிக்சாரக இந்திய தேசியக் கொடியை வைத்தார்!”

– பன்னாட்டு நிறுவனங்களின் இந்தப் பாராட்டை மோடி தன் பேஸ்புக் தளத்தில் பதிவு செய்தார். அந்த போஸ்ட்டுக்கு திருநெல்வேலி மாவட்டத்தின் கடைகோடி கிராமத்தில் இருந்த சாரம் கட்டிய இளைஞன் ஒருவனும் லைக் போட்டான்.

லைக் போட்ட அவன் மனதில் இரண்டு கேள்விகள்..

@ ஏற்கனவே செல்போன் பயன்பாட்டுல இல்லாத கிராமமே இந்தியாவுல இல்ல.அதுல முக்காவாசி எப்படியும் ஸ்மார்ட் போன்கள் தான்.அதுல எல்லார்டடயும் வாட்சப் இருக்கு,பேஸ்புக் இருக்கு.இதெல்லாம் வேலை செய்ய தேவையான 3ஜி இன்டர்நெட் கூட இருக்கு.அதோட போன காங்கிரஸ் ஆட்சி கொண்டாந்த கிராம் புரோஸ்கார் யோஜனா திட்டப்படி,ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துலயும் கம்ப்யூட்டர் இருக்கு,அதுல இன்டர் நெட் இருக்கு, அது வேகமாகவும் இருக்கு!வேற என்ன நம்ம மோடி சொன்ன டிஜிட்டல் இந்தியா?

@ டிஜிட்டல்ல இயங்குற இன்டர்நெட்டுக்கு, அனலாக்ல இயங்குற கரண்டு வேணும். அதுவே இங்க பல லட்சம் கிராமங்கள்ல இல்ல. இதுல எப்படி “டிஜிட்டல் இந்தியா” வேலை செய்யும்?

ஜி. துரை மோகன்ராஜூ