வங்கிகள் ஐந்து நாட்கள் செயல்படாது…பாதிக்கப்படும் பொதுமக்கள்! 

டெல்லி: வங்கிகள் போராட்டம் நடத்தவுள்ளதால் தொடர்ந்து ஐந்து நாட்கள் வங்கிகள் செயல்படாது என வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.

மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளை இணைப்பதாக கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்தது. இதற்கு அப்போதே வங்கி ஊழியர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதுமட்டுமில்லாமல் வங்கி   ஊழியர்களில் ஒரு பகுதியினரை பிரித்து அவர்களுக்கு  மாறுபட்ட ஊதியம்  வழங்கப்படுவதை எதிர்த்தும் போராட்டம் நடைபெற உள்ளது. பொதுத்துறை வங்கிகளை இணைக்கக் கூடாது என்பதற்காக வங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்தவுள்ளனர்.

ஆகையால்  டிசம்பர் 21 முதல் 26 வரை வங்கிகள் செயல்படாது என இரு ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன. இதனால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாவார்கள். மேலும் ஏடிஎம்கள்  எப்போதும் கூட்டத்துடன் இருப்பதற்கான வாய்ப்பு உருவாகும்.

You may have missed