வண்டலூர் பூங்கா: 36 குட்டிகள் பொரித்த மலைபாம்பு  

சென்னை: வண்டலூர் வன உயிரின பூங்காவில் மலை பாம்பு முட்டைகள் பொரித்து 36 குட்டிகள் வெளிவந்தன.

pythonCubsCame-out_SECVPF

சென்னை அருகே உள்ள வண்டலூர் வன உயிரின பூங்காவில் எல்லா வகையான மிருகங்களும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் உள்ளது. அங்குள்ள பாம்புகள் கூடத்தில் 26 இந்திய மலைப்பாம்புகள் உள்ளது.

இவற்றில் ஒரு பெண் மலைப்பாம்பு இனச்சேர்க்கை செய்து 2 மாதத்திற்கு முன்பு 41 முட்டைகளை போட்டது. இந்த முட்டைகளை பெண் மலைப்பாம்பு அடைகாத்து வந்தது.

சுமார் 2 மாத காலம்   அடை காக்கப்பட்டு வந்த முட்டைகள் கடந்த 23–ந்தேதி பொரித்தது. முட்டையிலிருந்து 36 பாம்பு குட்டிகள் வெளி வந்தன.  ஒவ்வொரு பாம்பு குட்டிகளின் சராசரி நீளம் 45 முதல் 60 செ.மீ உள்ளது. மலைபாம்பு குட்டிகள் சராசரியாக 4 மீட்டர் நீளம் வரை வளரும்.  முழு வளர்ச்சியடைந்த பாம்பு சுமார் 50 கிலோ வரை எடை இருக்கும்.  மலைப்பாம்பு குட்டிகள் நன்கு வளர்ந்தவுடன் பாம்புகள் இல்லத்தில் சுற்றுலா பயணிகள் பார்வைக்கு வைக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published.