Random image

வரலட்சுமியின் பிறந்தநாள் பரிசு : டேனி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை வரலட்சுமி.

ஹீரோயின் மற்றும் குணச்சித்திர வேடத்தை தவிர வில்லி வேடத்தில் தான் அதிகம் பேசப்படுகிறார்.

இன்று தனது 34 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது இந்த பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில், அவரது நடிப்பில் உருவாகி வரும் டேனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. எல்.ஜி.சந்தனமூர்த்தி இயக்கும் இப்படத்தை பிஜி மீடியா நிறுவனம் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படம் மூலம் வரலட்சுமிக்கு ‘மக்கள் செல்வி என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சேவ் சக்தி என்ற அமைப்பை தொடங்கியுள்ள வரலட்சுமிக்கு இந்த பட்டம் கச்சிதமாக பொருந்தியுள்ளது.