வார்த்தையாலேயே சுட்ட அஜீத்!

 

ajith new

டிகர் சங்க தேர்தலில். இதில் வாக்களிக்கப்போகிறவர்கள் மொத்தமே மூவாயிரத்து சொச்சம் பேர்தான். ஆனால் பொதுத் தேர்தல் மாதிரி பரபர மோதல் நடக்கிறது.

லஞ்சம், ஊழல் என்று அதிரடியாய் அறிக்கைவிடுகிறார்கள்.   சூரமங்கலத்தில் வசிக்கும் ஏழை நாடக நடிகரில் இருந்து சூப்பர் ஸ்டார் ரஜினி வரை எந்த நடிகரையும் விடாமல் சந்தித்து ஓட்டு கேட்கிறார்கள்.

இந்த பாலிடிக்ஸுக்குள், ஒரு பாலிடிக்ஸ்.  விஷால் அணி, விஜய்யை சந்திக்க சென்றபோது, அவர் மட்டும் மிஸ்ஸிங். அவர்களுக்குள் அப்படி ஒரு ஈகோ யுத்தம்.

அடுத்து இன்னொரு விவகாரம் கிளம்பியிருக்கிறது. அஜீத்தை சந்திக்க முடிவு செய்து, அவருக்கு போன் போட்டு அப்பாயிண்மெண்ட் கேட்டது விஷால் அணி.

அஜீத்தோ, “நடிகர் சங்கம்.. தேர்தல்.. ஓட்டு.. என்றெல்லாம் பேசாமல், நட்பு முறையில் சந்திப்பதானால் வாருங்கள்” என்று  வார்த்தையாலேயே சுட்டிருக்கிறார் “தல.”

“சங்கத்துக்கு இதான் மதிப்பா” என்று புலம்புகிறது விஷால் அணி!

Leave a Reply

Your email address will not be published.