வார ராசிபலன் 16.03.2018 to 22.03.2018 – வேதா கோபாலன்

வார ராசிபலன் 16.03.2018 to 22.03.2018 – வேதா கோபாலன்

weekly rasi palan  16.03.2018 to 22.03.2018 – Veda Gopalan

மேஷம்

மெல்ல மெல்ல உங்கள் பிரச்சினைகளும் சோகங்களும் குறைய ஆரம்பிக்கும். எல்லாம் சமீபத்தில வந்த தற்காலிகப் பிரச்சினைகள்தான் அல்லவா?  இயல்பாக உள்ள கோபமும் ஆத்திரமும் தலைதூக்காதபடி சுற்றி உள்ளவர்கள் அட்ஜஸ்ட் பண்ணிக்குவாங்க. வெளிநாட்டு வாகனம்… வெளிநாட்டுக் கல்வி ஆகியவை மிகவும் சந்தோஷமளிக்கும். பலனும் அதிகம் கிடைக்கும். ஆன்மிக ஈடுபாடு அதிகம் ஏற்படும். கோயில்களுக்கு வேண்டிக்கொண்ட பிரார்த்தனைகள் இனிதே நிறைவேறும். நடுவில் சில காலமாகப் பிரச்சினை செய்துகொண்டிருந்த மகன்களும் மகள்களும் பணிந்து வந்து காலில் விழுவாங்க. போனால் போகட்டும். மன்னிச்சுடுங்க.

ரிஷபம்

நடுவில் முறுக்கிக்கொண்டிருந்த உறவினர்களும் நண்பர்களும் மெல்ல வெள்ளைக்கொடி காண்பித்து நெருங்கி வருவாங்க. பந்தா காண்பிக்காமல் ஏற்றுக்கொள்ளுங்க. பாவம். பிழைச்சுப் போகட்டும். அலுவலகத்தில் நீங்கள் காத்திருந்த மற்றும் எதிர்பார்த்திந்த நல்ல விஷயங்களும், பதவி உயர்வும் வேலை மாற்றலும் விரைந்து கிடைக்கும். குழந்தைகளின் சாதனைகளால் மனசு மகிழும். முன்பு செய்திருந்த முதலீடுகள் குட்டி போட்டு லாபம் காண்பிக்கும். உங்களுக்கென ஒரு தனிக் கவர்ச்சி அம்சம் உள்ளது. அது இப்போது அதிகமாகும்.

மிதுனம்

நடுவில் சில காலம் குழந்தைகளால் கவலைகளும், சிரமங்களும் டென்ஷன்களும் ஏற்பட்டுக்கொண்டிருந்தன அல்லவா? அதெல்லாம் இப்போது காணாமல் போயிருக்குமே.. ரைட்டா? அப்பாடா என்ற உணர்வு வீட்டில் மட்டுமல்லாமல் அலுவலகத்திலும் ஏற்படும். நெருங்கிய உறவினர்களுடன் சிறு மனஸ்தாபங்களை உங்களால் எவ்வளவு முயன்றாலும் தடுக்க முடியவில்லையா? லீவ் இட்.. உங்கள் பக்கத்திலிருந்து பிரச்சினை ஏற்படாமல் பார்த்துக்குங்க. அவங்க பிரச்சினை ஏற்படுத்தினால் கண்டுக்காம விடப்பாருங்க. பணவரவு அதிகமாகும்ங்க.

கடகம்

ஏற்கனவே உங்க குணம் ஒரு நாளைக்கு இருந்தாற்போல் மறு நாள் இருப்பதில்லை. இதில் உங்களிடம் பாராட்டும்படியாக உள்ள மென்மையான குணங்கள் உங்களைவிட்டுப் போகாமல் பார்த்துக்குங்க ப்ளீஸ். சோம்பல் இல்லாமல் உழைக்கும் அபார குணம் உங்க கிட்ட இருக்கு. அதனால் ஜெயித்துக்கொண்டே இருப்பீங்க. கம்பீரமும் கவர்ச்சி அம்சமும் அதிகரிக்கும். தந்தைக்கு நிகராக வழிகாட்டும் ஒரு ஆசான் கிடைப்பார். மனசில் நிம்மதி அதிகரிக்கும். தாயின் சிநேகிதங்களால் நன்மைகளும் உதவியும் கிடைக்கும். வாழ்வில் முன்னேற வழி கிடைக்கும்.

சந்திராஷ்டமம் : மார்ச் 15 முதல் மார்ச் 17 வரை

சிம்மம்

எதை எடுத்தாலும் சரியா அமையவில்லை என்று ஒரு எண்ணம் அதிகரிக்கும். தன்னம்பிக்கை இழக்காதீங்க. எல்லாம் சரியாய்த்தான் இருக்கு. நடுவில் ஒரு சின்னத் தடைதான் ஏற்பட்டது. உடனேயே மனம் தளர்ந்துட்டீங்க. அரசியல் மற்றும் அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இனி தடைகள் மெல்ல மெல்ல விலகும். நண்பர்களிடம் இப்போதைக்கு அதிகம் ஒட்ட வேண்டாம். அதற்காக வெட்டிக்கொண்டு விலகவும் கூடாது. லோனுக்கு மனு செய்ய இது உகந்த நேரம் இல்லீங்கோ. குழந்தைகளின் வெற்றி மகிழ்ச்சி வழங்கும்.

சந்திராஷ்டமம் : மார்ச் 17 முதல் மார்ச் 19 வரை

கன்னி

கணவர்/ மனைவி பல வகையில் முன்னேற்றம் காண்பது உங்களுக்கு நிம்மதியும் சந்தோஷமும் தரும். மேடையில் கைதட்டல் வாங்குவீங்க. கணவரை/ மனைவியை நல்ல காரணத்துக்காகப் பிரிய வேண்டி வரலாம். பொறுமையாய் இருங்கள். அதன் பலன் இனிக்கும். குழந்தைகள் புத்திக்கூர்மை காரணமாக செயற்கரிய செயல்கள் செய்து உங்களை மகிழ்வித்தாலும் அவர்களைப்பற்றித் தேவையே இல்லாமல் பயமும் டென்ஷனும் சந்தேகமும் கொள்கிறீர்கள். வேண்டாமே! மின்னல் மின்னுவது போல் திடீர் லாபங்களும் வருமானமும் வரும். ஜமாயுங்க. என்ஜாய்.

சந்திராஷ்டமம் : மார்ச் 19 முதல் மார்ச் 21 வரை

துலாம்

உங்களிடம் உள்ள மிகப் பெரிய நல்ல குணம் எல்லோரையும் சரிசமமாக பாவிப்பதுதான். அதே காரணத்தினாலேயே உறவினரிடமும் நண்பர்களிடமும் நல்ல பெயர் எடுப்பீங்க. என்னாகுமோ ஏதாகுமோ என்று நீங்க மிகவும் பயந்த விஷயங்கள் எல்லாம் அநாயாசமாக உங்களுக்குச் சாதகமாகவே முடியும். சின்னச்சின்ன திட்டங்கள் சற்றே திசை மாறும். அதனால் எந்த இழப்பும் வராது. பயம் வேண்டாம். குறிப்பாக முதலீடுகள் செய்யும் திட்டம் சற்றே தள்ளிப்போகலாம். அது மிகவும் நன்மைக்கே. சின்னச்சின்ன அநாவசிய செலவுகள் வந்து கடுப்பேற்றும். பொறுத்துக்குங்க. வேற வழி?

சந்திராஷ்டமம் : மார்ச் 21 முதல் மார்ச் 24 வரை

விருச்சிகம்

பேச்சை எவ்வளவுக்கெவ்வளவு குறைக்கிறீர்களோ அத்தனைக்கத்தனை உங்களுக்குத்தான் நல்லது. சட்டென்று எடுத்தெறிந்து பேசிவிடாதீங்க. அதிலும் குறிப்பா பெரியவங்களையும், மேலதிகாரிங்களையும் பகைச்சுகிட்டா பிரச்சினை உங்களுக்குத்தான். ஏனெனில் உங்க மேல தப்பு இருக்க வாய்ப்பு அதிகம். எனவே பணிவும் பொறுமையும் இப்போதைக்கு மகா/மெகா அவசியம். வாயைக்கொடுத்து மாட்டிக்காம இருக்க முயற்சி செய்ங்க. வாக்குறுதிகளை அரசியல்வாதி மாதிரி அள்ளிவீசிவிட வேண்டாம்.. ஆமாம்.. சொல்லிட்டேன். நிறைவேற்றுவது சுலபம் இல்லை.

தனுசு

திடீர்க் கோபம்.. திடீர் சாந்தம் என்று தடுமாறுவீங்க. ஆனாலும் அடிப்படையில் யாருக்கும் கெடுதல் நினைக்காத நல்ல மனசு கொண்டவர் நீங்க என்பதால் உங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது. கணவரின்/ மனைவியின் வாழ்வில் எதிர்பாராத நிகழ்வுகள் துரிதமாக நடந்தேறும். ஆரோக்யத்தின்மீது எப்பவும் ஒரு கண் வெச்சுக்கிட்டே இருங்க. குடும்ப உறவுகளில்… குறிப்பாய்த் தந்தை வழி சொந்தக்காரங்களும் சகோதரர்களும் கொஞ்சம் முறைப்பாய் நடந்துக்குவாங்க. உங்க பக்கம்தான் நியாயம் இருக்கும். எனவே அமைதியாப் போவீங்க. மற்றதை தெய்வம் பார்த்துக்கும்.

மகரம்

விரைவான திடீர்ச் செலவுகள் வரும். தயார் நிலையில் இருங்க. சகோதரர்களால் சற்று டென்ஷன்களும் கோபமும் முளைக்கும். ஒரு பக்கம் புகழும் பெருமையும் பாராட்டும் கிடைத்துக்கொண்டிருந்தாலும், மறுபுறம் சின்னச்சின்ன ஏமாற்றங்களும் இருக்கும். நீங்கள் நல்லதையே பாருங்கள். கடுகை பூதக்கண்ணாடி வெச்சுப் பார்த்து பாறை என்று பயந்து ஓடாதீங்க. உங்களுக்கும் சரி… உங்க கணவர் அல்லது மனைவிக்கும் சரி.. வெளிநாடு சம்பந்தமான எந்த முயற்சியும் நல்லபடியாகவே முடியும். சற்றும் எதிர்பாராத வகையில் உங்க முதலீடுகளும் தொழிலும் பிரமாதமான லாபத்தைக்கொண்டு வந்து மடியில் போடும். நியாயமான வழியில் வருகிறதா என்று மட்டும் கண்டிப்புடன் பார்த்துக்குங்க.

கும்பம்

குழந்தைகளால்.. குறிப்பாய் ஆண் வாரிசுகளால் நன்மையும் மகிழ்ச்சியும் ஏற்படும். சகோதர சகோதரிகளின் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பாலிடிக்ஸ் பண்ணாம, புன்னகையுடன் கலந்துக்கிட்டு சந்தோஷமா வாங்க. வெளிநாட்டு முதலீடுகள் லாபம் தரும். குடும்பத்தில் யாருக்கேனும் காதல் திருமணம் கைகூடும். கணவன் மனைவிக்குள் மிகுந்த ஒற்றுமை நிலவும். நிஜம்தான். நம்புங்க. கல்வி சம்பந்தமான தொழில்ல உள்ளவங்களுக்குச் சின்ன ஏற்ற இறக்கங்களுக்குப் பிறகு நிலமை சீரடையும். புது சினேகிதர்களை நம்பி அதிகம் போகாதீங்க.

மீனம்

கவர்ச்சி அம்சம் ஓஹோவென்று உயர்வதால் உங்களை எல்லோரும் புதுவித மதிப்போடு பார்ப்பாங்க. மேடை போட்டுப் பாராட்டிக் கைதட்டுவாங்க. அலுவலகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். தலைமைப் பொறுப்பு அல்லது மற்றவங்களை வழிநடத்தும் பொறுப்பு உங்களை வந்தடையும். வருமானமும் அதிகரிக்கும். அலுவலகத்தில் சற்றும் எதிர்பாராத திடீர் மாற்றல் அல்லது பதவி உயர்வு கிடைக்கும். மம்மிக்கு எதெல்லாம் ரொம்பவும் தொல்லை தந்து தாமதமாயிற்றோ அவையெல்லாம் மடமடவென்று சரியாகும்.

கார்ட்டூன் கேலரி