“விக்னேஷுடன் எனக்கு திருமணம் முடிந்துவிட்டது!” :  நயன்தாரா ஸ்டேட்மெண்ட்

 

நயன் - விக்னேஷ்
                      நயன் – விக்னேஷ்

காதல் என்றாலே நினைவுக்கு வருவபவர், தமிழரின் கனவுக்கன்னி நயன்தாராதான். ஏற்கெனவே சிம்புவுடன் காதல்வயப்பட்டார். இருவருமே தங்கள் காதலை வெளிப்படையாக அறிவித்தார்கள். பிறகு “மியூச்சுவல் அண்டர்ஸ்டேண்டிங்”கில் பிரிந்தனர்.

அதற்குப் பிறகு பிரபுதேவாவுடன் காதல் அரும்பியது நயனுக்கு. திருமணத்துக்கு ஏற்பாடு நடந்தது. இதற்காக தனது மனைவியை விவாகரத்து செய்து பிரபுதேவா காத்திருந்தார். ஆனால் இந்தக் காதலும் கல்யாணத்தைத் தொடவில்லை.

இவர்கள் இருவர் தவிர சைட் டிஷ் ஆக ஆர்யா, உதயநிதி உட்பட சில நடிகர்கள் நயனுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார்கள்.

“இனி என் வாழ்க்கையில் காதல் என்பதே இல்லை!” என்று விரக்தியாக நயன் கூறினார்.

இந்த நிலையில்தான், டைரக்டர் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும்  நெருக்கம் என்று கிசுகிசுக்கப்பட்டது. விக்னேஷ் சிவன் ‘போடா போடி’ என்ற படத்தை இயக்கியவர். அடுத்ததாக நயன், விஜய் சேதுபதியை ஜோடியாக்கி ‘நானும் ரவுடிதான்’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார். விரைவில் இந்தப் படம் ரிலீஸ் ஆக உள்ளது.

விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவருமே தங்கள் காதலை வெளிப்படையாகச் சொல்லவில்லையே தவிர, சினிமா வட்டாரத்தில் எல்லோருக்கும் தெரிந்த செய்திதான்.

“இந்த காதலாவது நயனுக்கு வெற்றிகரமாக அமைய வேண்டும்” என்று நயனின் நலம் விரும்பிகள் வேண்டாத தெய்வம் இல்லை.

அவர்களுக்க ஓர் நற்செய்தி!

இருவருக்கும் திருமணம் முடிந்து மூன்று மாதங்கள் ஆகின்றன. குருவாயூர் கோயிலில் இரு குடும்பத்தார் மட்டும் சாட்சிகளாக இருக்க, இந்தத் திருமணம் நடந்தது.   “நானும் ரவுடிதான்” பட ரிலீஸுக்குப் பிறகு அறிவிக்கலாம் என இருவரும் திட்டமிட்டிருந்தனர்.

பிறகு விசயம் வெளியில் வந்தது எப்படி?

சமீபத்தில் நயன் வீட்டில் வருமானவரி ரெய்டு நடந்தது அல்லவா?

அப்போது கிடைத்த சொத்துப்பத்திரங்கள் சில விக்னேஷ் சிவன் பெயரில் இருந்தது. அதிகாரிகள், இது குறித்து கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு நயன்தாரா, “விக்னேஷ் என் கணவர். ஆகவே அவர் பெயரில் சில சொத்துக்களை மாற்றியிருக்கிறேன்” என்று பதில் சொல்லி இருக்கிறார். அதோடு திருமணம் செய்ததற்கான ஆவணங்களையும் காண்பித்திருக்கிறார்.

இப்போதுதான் விசயம் வெளியே வந்திருக்கிறது!

எப்படியோ தம்பதியினர் நூறாண்டு, நூறாண்டு வளமுடன் நலமுடன் இணைந்து வாழ்க!

Leave a Reply

Your email address will not be published.

You may have missed