விக்ரம், துருவ் படத்துக்கு தனுஷின் கேமராமேன்..

நடிகர் விக்ரம், துருவ் இணைந்து நடிக்கும் படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார். லலித்குமார் தயாரிக்கிறார். இப்படத்துக்கு தற்காலிகமாக சியான் 60 என பெயரிடப் பட்டிருக்கிறது. இதன் ஸ்கிரிப்ட் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக ஸ்ரேயாஷ் கிருஷ்ணா ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.


தனுஷ் நடிக்க கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் ’ஜெகமே தந்திரம்’ படத்தின் கேமிராமேனாக ஸ்ரேயாஷ் கிருஷ்ணா பணியாற்றி உள்ளார். இப்படம் கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு திரைக்கு வருகிறது. சியான் 60 படபிடிப்பு ஊரடங்கிற்கு பிறகே தொடங்கவிருக்கிறது.