’விசாரணை’ படத்திற்கு 3 தேசிய விருதுகள்

visaranai

சிறந்த திரைப்படங்களுக்கான 63-வது தேசிய விருதுகள் மத்திய அரசால் இன்று அறிவிக்கப்பட்டன. 2015ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

சிறந்த படத்தொகுப்புக்கான விருதை, விசாரணை படத்தின் தொகுப்பாளர் கிசோர் பெற்றுள்ளார். வெற்றிமாறன் இயக்கிய இப்படம், தமிழ் திரைப்படங்களில் சிறந்த படமாகவும் தேர்வுசெய்யப்பட்டுள்ளது. விசாரணை படத்துக்காக சிறந்த துணை நடிகர் விருதைப் பெறுகிறார் சமுத்திரக்கனி.