விஜயகாந்துக்கு ரஜினி ரசிகர்கள் எச்சரிக்கை

vijayakanth-rajini
சென்னை வில்லிவாக்கத்தில் நேற்று பரப்புரை செய்த விஜயகாந்த், நடிகர் ரஜினிகாந்த் மிரட்டலுக்கு பயந்து பின் வாங்கி விட்டதாக விமர்சித்தார்.

அரசியல் தலைவர்கள் மிரட்டலுக்கு பயந்து நடிகர் ரஜினியைப் போல் பின் வாங்க மாட்டேன் என்று விஜயகாந்த் தெரிவித்தார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பேச்சு ரஜினியை அவமதிக்கும் வகையில் இருப்பதாகவும், இதுபோன்ற செயல்களில் விஜயகாந்த் இனி ஈடுபட வேண்டாம் என்றும் ரஜினி ரசிகர்கள் எச்சரித்துள்ளனர்.