விஜயகாந்துக்கு ஸ்டாலின் கொடுத்த பதிலடி!

vijayakanth

திமுக, பாஜக, மக்கள் நலக்கூட்டணி ஆகியவற்றுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர் தேமுதிகவினர். என்னை நடந்ததோ தெரியவில்லை. யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் எதிர்ப்பாராத முடிவான- தனித்துப்போட்டியிடப்போவதாக அறிவித்தார் விஜயகாந்த். அத்தோடு நில்லாமல், யாருடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் அறிவித்தார். விஜயகாந்தின் இந்த பேச்சு கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. பாஜக இதுகுறித்து விமர்சனம் செய்து வருகிறது. ஆனால் திமுக இதுவரை எதுவும் பேசாமல் இருந்தது.

இந்த நேரத்தில், தேமுதிகவும் திமுகவும் மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாக செய்திகள் வருகின்றன. இந்த நிலையில், அண்ணா அறிவாலயத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘’தேமுதிகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை எதுவும் நடத்தவில்லை. அதிமுக ஆட்சியை அகற்றுவதற்கான பணியில் திமுக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது’’ என்றார்.