விஜயகாந்த் திரும்பியவுடன் பாஜக கூட்டணி குறித்து இறுதி முடிவு: தேமுதிக எல்.கே.சுதீஷ்

சென்னை:

நாடாளுமன்ற தேர்தல் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.  தேமுதிக, பாஜகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடை பெற்று வருகிறது என்று கூறிய தே.மு.தி.க மாநில இளைஞர் அணிச் செயலாளர் எல்.கே.சுதீஷ், விஜயகாந்த் திரும்பியதும் கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்து உள்ளார்.

சென்னையில் இன்று நடைபெற்ற தே.மு.தி.க கொடிநாள் கொண்டாட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எல்.கே.சுதீஷ்,  கூட்டணி குறித்து பாஜக உள்பட பல கட்சிகளிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும்,   பிப்ரவரி மாத இறுதிக்குள் தே.மு.தி.க. கூட்டணி இறுதி செய்யப்படும் என்று கூறினார்.

மேலும்,  அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த் இன்னும் 2 வாரத்தில் நாடு திரும்ப இருப்பதாகவும் அதன் பிறகு கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.