விஜயகாந்த் தெளிவாக இருக்கிறார்: பிரேமலதா பேச்சு

-premalatha

தேமுதிக தேர்தல் அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நெல்லை டவுனில் நேற்று இரவு நடந்தது. பிரேமலதா விஜயகாந்த் இக்கூட்டத்தில் பங்கேற்றுப்பேசியபோது, ’’விஜயகாந்த் குழப்பத்தில் இருக்கிறார், தெளிவான முடிவை அவரால் எடுக்க முடியவில்லை என்றெல்லாம் விமர்சனம் செய்தார்கள். 1967-ம் ஆண்டில் தமிழக அரசியலில் அறிஞர் அண்ணா திருப்புமுனையை ஏற்படுத்தினார். அதே போல், காஞ்சீபுரத்தில் அரசியல் திருப்புமுனை மாநாட்டை விஜயகாந்த் நடத்தினார். தொண்டர்கள் ‘கிங்‘ ஆக இருக்க வேண்டும் என்று கூறியதால், தே.மு.தி.க. மகளிர் தின மாநாட்டில் தனித்து போட்டியிடுவோம் என்று அறிவித்தார். அவரிடம் ஒளிவுமறைவு கிடையாது. ஏனென்றால் அவர் யாரிடமும் பயப்பட தேவையில்லை.

மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள், விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க முன்வந்து சந்தித்து பேசினார்கள். நல்ல கூட்டணி தற்போது அமைந்து இருக்கிறது’’என்று தெரிவித்தார்.

கார்ட்டூன் கேலரி