விஜயகாந்த் படத்துக்கும் எழுகிறது எதிர்ப்பு!

12243133_1185037644844417_5065085388941887809_n
விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடிக்கும் இரண்டாவது படமான ‘தமிழன் என்று சொல்’ திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடந்தது. இதில் விஜயகாந்தும் நடிக்கிறார்.

இந்த நிலையில், படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது தமிழர் பண்பாட்டு மையம் என்ற அமைப்பு. இதன் சார்பில் ராஜ்குமார் பழனிச்சாமி தெரிவித்துள்ளதாவது:

“தேமுதிக தலைவர் விஜயகாந்த், தானும் தன் மகனும் நடிக்கும் புதிய படத்துக்கு “தமிழன் என்று சொல்” என பெயரிட்டிருக்கிறார்.

தமிழர் அல்லாத விஜயகாந்த், இது போல தலைப்பு வைப்பது, தமிழர்களை திட்டமிட்டு ஏமாற்றும் செயல் !

விஜயகாந்த் உட்பட தெலுங்கர்கள்,தங்களது உண்மையான அடையாளத்துடன் தமிழகத்தில் அரசியல் செய்ய வேண்டும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பிலும் கோரிக்கை வைக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.